என்ன இலவசமா? அப்ப நிதி இல்லை... மத்திய அரசு !

தமிழக அரசு வழங்கும் ஆடு, மாடு போன்ற இலவச திட்டங்களும் நிதி ஒதுக்க வேண்டும் என்று எதிர்ப் பார்க்கக் கூடாது என்று மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி கூறியுள்ளார்.
இன்று சென்னை வந்த வி. நாராயணசாமி இது தொடர்பாக விமான நிலையத்தில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதி தேர்தலுக்கான முறையான அறிவிப்பை தேர்தல் ஆணையம் 

ஒரிரு நாளில் வெளியிட உள்ளது.இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பற்றி சோனியா காந்தி அறிவிப்பார்.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து 111 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.ஒருவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்

என கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவுடன் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வந்தால் தான் ராஜினாமா செய்ய வேண்டும்.
இதனால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தில் தவறு செய்து தான் வெற்றி பெற வில்லை என்பதை ப.சிதம்பரம் நிரூபிப்பார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கவில்லை என முதல்- அமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டுவது சரியல்ல.

தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டது. 
ஆனால் தற்போது ரூ. 28 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப் படுகிறது. மேலும் தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல் படுத்த ரூ.16 ஆயிரம் கோடி செலவிடப் படுகிறது.

தமிழகத்திற்கு மட்டும் ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு வழங்கும் ஆடு, மாடு போன்ற இலவச திட்டங்களும் நிதி ஒதுக்க வேண்டும் என்று எதிர்ப் பார்ப்பது நல்லதல்ல என்றார்.
Tags:
Privacy and cookie settings