ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.பி.யான 71 வயது அன்வர் ராஜா மும்பையைச் சேர்ந்த பெண்ணை 3-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அன்வர் ராஜா முதல் மனைவியை விவகாரத்து செய்து தாஜிதா என்பவரை 2-வது திருமணம் செய்தார். தாஜிதா கடந்த ஆண்டு காலமானார். அன்வர் ராஜாவுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் அன்வர் ராஜா குர்ஷித் பானு என்ற மும்பையைச் சேர்ந்த பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் வீட்டில் எளிதாக நடைபெற்றது.
இத் திருமணத்திற்கு அவரது மகன்கள், மகள்கள், மற்றும் பேரன், பேத்திகள் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தனர். அன்வர் ராஜா ராமநாதபுரம் பனைகுளத்தை சேர்ந்தவர்.
தமிழக அமைச்சராக இருந்தவர். தற்போது அதிமுக சிறுபான்மை பிரிவு செயலர் மற்றும் ராமநாதபுரம் தொகுதி எம்பியாகவும் உள்ளார்.