கடந்த வாரம் நிகழ்ந்த எமிரேட்ஸ் விமான விபத்தில் உயிர் பிழைத்த அப்துல் காதர் (வயது 62) என்பவருக்கு அடுத்த வாரமே 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்து சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.
வரும் டிசம்பர் மாதத்துடன் பணி ஓய்வு பெறவுள்ள கேரளாவைச் சேர்ந்த அப்துல் காதர் ரமலான் ஈகைத் திருநாளை கொண்டாட ஊருக்குச் செல்லும் வழியில்
துபை டூட்டி ஃப்ரியில் டிக்கெட்டை வாங்கிச் செல்ல மீண்டும் ஊரிலிருந்து திக்... திக்... நிகழ்வுடன் திரும்பிய ஒரு வாரத்தில் சுமார் 3.67 மில்லியன் திர்ஹத்திற்கு சொந்தக்காரராகி உள்ளார்.
திடீர் மில்லியனர் அப்துல் காதர் பரிசை வென்றிருந்தாலும் நிதானமாகவே பேசுகிறார். உழைத்துக் கிடைக்கும் ஊதியத்திற்கு இணையானதல்ல இந்தப் பரிசு.
இந்தப் பரிசுப் பணத்தை வைத்துக் கொண்டு கேரளாவில் தேவையுடைய ஏழைகளுக்கும் மருத்துவ தேவையுடைய வர்களுக்கும் நேரடியாக உதவப் போகிறேன் என்று கூறியவருக்கு
இந்த உதவும் மனப்பாங்கை அவரது 21 வயது மகன் 13 நாள் குழந்தையாக இருக்கும் போது திடீரென முடக்கு வாத நோயால் பாதிக்கப் பட்டதால் மனரீதியாகவும்,
பணரீதியாகவும் பட்ட கஷ்டங்கள் இயல்பாகவே பிறருக்கு உதவும் தன்மையை வழங்கியுள்ளன.
ஏழைகளுக்கு உதவும் வாய்ப்பை இந்தப் பரிசுப் பணத்தின் மூலம் வழங்கிய இறைவனுக்கு அவர் நன்றி கூறவும் தவறவில்லை.