மிளகாய் போடி தூவி 1 கிலோ தங்கம் கொள்ளை !

திண்டுக்கல் அருகே நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் போடி தூவி 1 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப் பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 
மிளகாய் போடி தூவி 1 கிலோ தங்கம் கொள்ளை !
திண்டுக்கல் அருகே எரியோடு என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடையை பூட்டி விட்டு 1 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களுடன் செல்வராஜ் என்பவர்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

காமராஜபுரம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தை மறித்த இருவர் செல்வராஜ் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு நகைக்கள் வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பியோடினர். 

மேலும் 3 தனிப்படைகள் அமைத்து எரியோடு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதே போல் பட்டுக்கோட்டை அருகே வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் 50 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றனர். 

பொன்னவராயன் கிராமத்தை சேர்ந்த போஸ்ட் மாஸ்டர் பாலசுப்பிரமணியன் வீட்டில் தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த கொள்ளை நடைபெற்றது.
இதே போல் நாகர்கோவில் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் போலீஸ்காரர் ஒருவர் வீடும் அடக்கம். 

தங்க நகைகள் ரொக்கம் எல்இடி டிவிக்கள், வெளிநாட்டு பொருட்கள் என அனைத்தையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.அத்துடன் வீட்டில் சாவகாசமாக அவர்கள் மது அருந்தி விட்டு சென்றுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings