நவீனாவை கொலை செய்யத் தூண்டியது இந்த 10 பேர் தான் !

நவீனாவை கொலை செய்யத் தூண்டிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அவரின் தந்தை அங்கப்பன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
நவீனாவை கொலை செய்யத் தூண்டியது இந்த 10 பேர் தான் !
விழுப்புரம் அருகே உள்ள வ. பாளையத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட மாணவி நவீனாவின் தந்தை அங்கப்பன் மாவட்ட கலெக்டர் லட்சுமி, டி.ஐ.ஜி. அனிஷா உசேன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் ஆகியோரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

எனது மகள் நவீனாவின் கொடூரமான கொலைக்கு காரணம் செந்தில். இவருக்கு தவறான ஆலோசனையும், பாதுகாப்பும் கொடுத்து 

எனது மகளை கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டிய 10 பேர் மீது, 'கொலை செய்ய தூண்டுதல்' என்ற பிரிவின் கீழ் வழக்குப் 

பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த 10 பேரும் தொடர்ந்து இதுபோன்ற கொடூரமான கொலைகளை ஆதரித்தும், ஆதரவாக பேசியும் வருகின்றனர்.
எனது மகள் 18 வயது நிறைவடையாத சிறுமி என்பதால் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப் பிரிவின் கீழ் இவர்கள் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

மேலும் எனது குடும்பத்தினருக்கு ஆபத்து ஏதேனும் ஏற்படாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் பெண்களுக்கு இத்தகைய கொடுமைகள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் 

எனது மகளை இழந்து வாடும் எங்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி மற்றும் இழப்பீடும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை அவர் முதல்வர், தலைமை செயலாளர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings