அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பலூன் ரக விமானம் தீ பிடித்ததில் அதில் சென்ற 16 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ் நகரத்தின் மீது பலூன் பறந்த போது திடீரென தீப்பிடித்தது.
காற்றின் வேகத்தில் சென்று கொண்டிருந்த பலூனில் தீ மளமளவென்று பரவியதால் அது வெடித்து சிதறியுள்ளது. கோர விபத்தில் பலூனில் இருந்த 16 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கருகி கிடந்த சடலங்களை மீட்டனர். உயிரிழந்தவர்கள் யார் யார் என்பதை கண்டறியவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கால்டு வேல்
புறநகர் காவல் தலைவர் டேனியல் லா தெரிவித்துள்ளார். பலூன் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு டெக்சாஸ் மாகாண ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பலூன் பறப்பதற்கான ஹைட்ரஜன் வாயு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.