கும்பகோணம் வீரசைவ பெரிய மடாதிபதிக்கு ரகசியமாக 2 மனைவிகள் இருப்பதாக நீக்கப்பட்ட இளைய மடாதிபதி கங்காதரன் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் உள்ளது வீரசைவ பெரியமடம். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள லிங்காயத் துகளின் கட்டுப்பாட்டில் இந்த மடம் செயல் படுகிறது.
இம்மடத்தின் 97வது பீடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள். 2012ல் பெங்களூருவை சேர்ந்த கங்காதரன் என்பவர் இந்த மடத்தின் 98வது பட்டத்தில் இளைய மடாதிபதியாக நியமிக்கப் பட்டார்.
ஜூனில் மாயமான ஜூனியர்
கடந்த ஜூன் 6ம் தேதி கங்காதர சுவாமிகள் திடீரென மடத்தில் இருந்து காணாமல் போய் விட்டார். இது குறித்து நீலகண்ட மகா சுவாமிகள் பெங்களூருவில் உள்ள தலைமை யகத்துக்கு தெரியப் படுத்தினார்.
துறவறத்துக்கு டாட்டா
அப்போது தான் உறவு பெண்ணான மமதா என்பவரை கங்காதரன் திருமணம் செய்து கொண்டது அம்பலமானது. இதனால் இளைய மடாதிபதி பதவியில் இருந்து கங்காதரனை டிஸ்மிஸ் செய்து பெரிய மடாதிபதி உத்தர விட்டார்.
2 வருஷமா போலி துறவி
அத்துடன் 2014-ம் ஆண்டே கங்காதரன் திருமணம் செய்து கொண்டார் என்ற ஆவணங்களும் கிடைத் திருக்கிறது.
2 ஆண்டுகளாக துறவி போல் வீர சைவ மடத்தில் நாடகமாடி வந்திருக்கிறார் என்றெல்லாம் கங்காதரன் மீது பெரிய மடாதிபதி அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை முன் வைத்தார்.
பணம் கேட்ட பெரியவர்
இந்த நிலையில் தம் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளித்த கங்காதரன் பகீர் தகவல்களை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், மட பீடாதிபதியாக இருக்கும் நீலகண்ட சுவாமிகள், என் மீது அவதூறு பரப்பி வந்தார்.
அவர் மடத்தின் பணத்தை கேட்டு அடிக்கடி டார்ச்சர் செய்தார். கடந்த பிப்ரவரி மாதம் மனைவிக்காக ரூ.25 லட்சம் தரும்படி கேட்டார். பணத்தை தராவிட்டால் உன்மீது மேலும் அவதூறு பரப்புவேன் என்றார்.
2 திருமணங்கள்.. ப்ளஸ் ஒரு அட்டெம்ப்ட்
நான் அவரைப் பற்றி விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்திருப்பது தெரிய வந்தது. அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் பங்காருப் பேட்டையில் இருக்கிறார்கள்.
அவர்களுக்காகத் தான் தான் அவர் பணம் கேட்டு டார்ச்சர் செய்தார். ஏற்கனவே இவர் பங்காரு பேட்டை மடத்தில் இருந்த போது ஒரு பெண்ணிடம் முறை தவறி நடந்ததாக புகார் உள்ளது.
நான் இப்போது குடும்பஸ்தனாக மாறி விட்டேன். என் மனைவி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலையில் கன்னட மொழித்துறை தலைவராக இருக்கிறார் என்றார்.