2.0' படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி | 2.0 'in this film directed by Ranjith Rajini !

0 minute read
2.0' படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. தாணு தயாரிப்பில் 
வெளியான இப்படம் இந்தியளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் சாதனையை வசூலில் முறியடித்தது.

அப்படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' உருவாகி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளிவரும் என தகவல்கள் வெளியாகி யுள்ளது.

அதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்க விருக்கிறார் ரஞ்சித். இப்படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார். இப்படம் 'கபாலி 2' ஆக இருக்கும் என தெரிவிக்கிறார்கள். ஆனால் தனுஷ் மற்றும் ரஞ்சித் இதனை உறுதிப் படுத்தவில்லை.

தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவின் மூலமாக இதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பால் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.
Tags:
Today | 29, March 2025
Privacy and cookie settings