3 நாளில் ரூ.105 கோடி வசூல் சுல்தான் சாதனை | Rs 105 crore at the box office record for 3-day sultan !

1 minute read
சல்மான் கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.105 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் கடந்த 6 ம் தேதி வெளியானது. வெளியான அன்று ரூ. 37 38 கோடி வசூல் செய்தது. 

இந்நிலையில் இரண்டாவது நாளில் சுமார் 36 கோடி, மூன்றாவது நாளில் சுமார் 31.50 கோடி என 3 நாட்களில் மொத்தம் ரூ.105 கோடி வசூல் செய்தது. இதன் மூலம் இந்தியாவில் முதல் 3 நாட்களில் அதிக வசூல் கொடுத்த படம்

என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்த சாதனையை இது வரை வைத்திருந்த ‘பஜ்ரங்கி பைஜான்’ படம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்த ஆண்டில் முதல் 3 நாள் வசூலில் ‘சுல்தான்’ முதலிடம் பிடித்தாலும் முதல் நாளில் அதிக வசூல் என்ற சாதனையை சல்மான் கானின் ‘பிரேம் ரதன் தான் பாயோ’ தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.40 கோடியை கடந்தது. இந்நிலையில் வரும் நாட்களில் ‘சுல்தான்’ மேலும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Today | 14, March 2025
Privacy and cookie settings