ராயப்பேட்டையில் மனைவி மற்றும் 3 மகள்களை படுகொலை செய்துவிட்டு தலைமறைவான கண வரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை முத்து தெருவில் வசிப்பவர் சின்னராஜ் (35).
ஸ்வீட் ஸ்டால்களில் இனிப்பு மற்றும் பலகாரங்கள் செய்து கொடுக்கும் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இதே வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இவரும் பாண்டியம்மாள் (38) என்பவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
பாண்டியம்மாளுக்கு பவித்ரா (19), பரிமளா (18) மற்றும் ஸ்நேகா (16) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். முதல் மகள் பவித்ரா பாலிடெக்னிக் கல்லூரியிலும், 3-வது மகள் ஸ்நேகா பிளஸ் 2-வும் படித்து வருகின்றனர்.
2-வது மகள் பரிமளா பாரா மெடிக்கல் சம்பந்தமான படிப்புக்காக முயற்சி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பூட்டி இருந்த சின்னராஜ் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து வீட்டு உரிமையாளர் ராஜா பகதூர் (73) ராயப்பேட்டை போலீஸுக்கு புகார் கொடுத்தார்.
விரைந்து வந்த போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர் அங்கு பாண்டி யம்மாள் மற்றும் 3 மகள்களும் இறந்து கிடந்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீஸார் அழுகிய நிலையில் இருந்த 4 உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சின்னராஜ் பற்றி எந்த தகவலும் இல்லை. ராயப்பேட்டை உதவி ஆணையர் ஜி.சங்கர், ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால குரு மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டது.
தனிப்படைப் போலீஸார் சின்னராஜின் இருசக்கர வாகன எண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சென்னை மெரினா கடற்கரையில் நிறுத்தப் பட்டிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுக்க சின்னராஜ் வந்தார்.
அப்போது மறைந்திருந்த தனிப்படைப் போலீஸார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி மற்றும் 3 மகள்களையும் கொலை செய்ததை சின்னராஜ் ஒப்புக் கொண்டார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸில் சின்னராஜ் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த சின்னராஜ் கடந்த 2012-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கட்டயம்பட்டி யைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருடன் சின்ன ராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பாண்டியம் மாள் ஏற்கெனவே திருமணமாகி 3 மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பழக்கத்தின் காரணமாக பாண்டியம்மாளை சின்னராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பாண்டியம் மாளையும், அவரது முதல் கணவருக்கு பிறந்த மகள்களையும் சென்னைக்கு அழைத்து வந்து ராயப்பேட்டை முத்து தெருவில் வசித்து வந்தார்.
சில காலமாக சின்னராஜுக்கும் பாண்டியம்மா ளுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு சண்டை வந்துள்ளது.
இதனால் தினமும் சின்னராஜ் குடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு வந்திருக்கிறார். பலமுறை வீட்டின் வெளியறையில் சின்னராஜ் படுத்து தூங்கியுள்ளார்.
இதனால் சின்னராஜ் மீது பாண்டியம்மாள் கோபமாக இருந்துள்ளார். பின்னர் ஊருக்கு சென்ற சின்னராஜ் கடந்த 20-ம் தேதி வீட் டுக்கு வந்துள்ளார்.
அன்றும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு சண்டை வந்துள்ளது.
அதன் பின் வேலைக்கு சென்ற சின்னராஜ் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பாண்டியம்மாள் வீட்டுக்குள் அனுமதிக்காத தால், சின்னராஜ் வெளியறையில் படுத்து தூங்கியுள்ளார்.
அதிகாலை 3 மணிக்கு கண்விழித்த சின்னராஜ், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாண்டியம்மாளை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.
அதன்பின் படுக்கையறைக்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த பவித்ரா, பரிமளா, ஸ்நேகா ஆகியோரையும் கொலை செய்துள்ளார்.
21-ம் தேதி காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு சின்னராஜ் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு வந்தார்.
சடலங்களுடன் 2 நாட்களாக தங்கியிருந்த சின்ன ராஜ் வீட்டிலிருந்து 23-ம் தேதி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
அது பற்றி வீட்டின் உரிமை யாளர் ராஜாபகதூர் கேட்ட போது, எலி செத்துப் போய் விட்டது. வெளியில் தூக்கி எறிந்து சுத்தம் செய்து விடுகிறேன் என்று சின்னராஜ் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்து விட்டதாக வீட்டு உரிமையாளரிடம் கூறி விட்டு, வீட்டை பூட்டி விட்டு சின்னராஜ் வெளியே சென்று விட்டார்.
மீண்டும் துர்நாற்றம் அதிகமாக வீசியதால் வீட்டின் உரிமையாளர் ராஜாபகதூர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மகளை மணக்க திட்டம்
கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பாண்டியம்மாளை ஆசை வார்த்தைக் கூறி சின்னராஜ் திருமணம் செய்து கொண்டார்.
திடீரென்று ஒருநாள் ஒரு மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியம்மாளிடம் சின்னராஜ் கேட்டுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பாண்டியம்மாள் சின்னராஜிடம் சண்டைப் போட்டுள்ளார். அன்றிலிருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இரவில் குடித்து விட்டு வரும் சின்னராஜை வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருந்துள்ளார் பாண்டியம்மாள்.
கடந்த 20-ம் தேதி இரவும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த சின்னராஜ் தாய், மகள்களை கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.