திருச்சி கே.கே.நகர், ராணி அண்ணாதுரை தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் பிஜி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது மகன்கள் மலையமான், அழகன். இருவரும் தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளனர்.
இந்தநிலையில் சுரேந்திரன் திருச்சி போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதாவிடம் நேற்று முன்தினம் அளித்த புகார் மனுவில், எனது மகன் மலையமான் சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி வந்த நிலையில், திருச்சி தீரன்நகரில் வசிக்கும் அமுதா என்பவர் வீட்டில் கடத்தி சிறை வைக்கப் பட்டிருப்பதாகவும்,
என் மகனுக்கு, தன்னைவிட 10 வயது அதிகமுள்ள அமுதாவின் மகள் தீபாவை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருவதும் தெரிய வந்தது.
இந்த திருமணம் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆகஸ்ட் 19ம் தேதி (நேற்று) திருமணம் நடப்பதாக பத்திரிகை அச்சிடப் பட்டுள்ளது.
இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி எனது மகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
மலையமான் கடந்த 2013ம் ஆண்டு வெளியான 'கோலாகலம்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவரது தம்பி அழகன், ரிலீசுக்காக காத்திருக்கும் 'சீனி' எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
மலையமான், தீபா இருவரும் மேஜர் என்பதால் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் போலீசாரும் திணறினர்.
இந்நிலையில் எந்தவித பிரச்னையுமின்றி நேற்று திருமணம் நடந்து முடிந்தது. 3வது முறை விழுந்து விட்டான்.
இது குறித்து சுரேந்திரன் கூறுகையில், அந்த பெண்ணுக்கு, என் மகனை விட 10 வயது அதிகம் என்பதால் திருமணத்தை எதிர்த்தேன்.
ஏற்கனவே 2 பெண்களை காதலித்து, அதுவும் போலீஸ் நிலையம் வரை சென்று மீட்டு வந்தேன்.
3வது முறை எவ்வளவோ முயன்றும் அவன் விழுந்து விட்டான் மீட்க முடியவில்லை. விவரம் தெரிந்த பிறகு மீண்டு வருவான்' என்றார்.
Tags: