தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை கடத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த பாகிஸ்தான் உளவாளி ஒருவன் ராஜஸ்தானில் கைது செய்யப் பட்டுள்ளான்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த நந்தலால் மகராஜ் என்ற அந்த நபரை ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் உளவுத்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவினர் கைது செய்துள்ளனர்.
மேலும் ஜெய்சால்மர் என்னும் இடத்திற்கு கொண்டு வரப்பட்ட அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தீவிரவாதிகளுக்காக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் தாயாரிக்கப் பயன்படும் சக்தி வாய்ந்த 35 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து ஆகியவற்றை கடத்தி வந்ததை விசாரணையில் நந்தலால் ஒப்புக் கொண்டுள்ளான்.
துணி வியாபாரி என்ற போர்வையில் ஆயுதக் கடத்தலில் நந்தலால் ஈடுபட து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் நந்தலாலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் 8 பேரை கூட்டுக் குழுவினர் தேடி வருகின்றனர்.
ஒரிஜினல் பாஸ்போர்ட் வைத்திருக்கும் பாகிஸ்தான் உளவாளி நந்தலால் அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி எப்படி ஆயுதங்களை கடத்தி வந்தான் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.