கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தின் ரன்வே பழுது பார்க்கும தொடங்க வுள்ளதால் அடுத்த மாதம் ஜனவரி 6ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு விமான நிலையம் பகலில் இயங்காது.
மாலை யிலிருந்து இரவு வரை மட்டுமே விமான நிலையம் இயங்குமாம். கொழும்பு நகரில் பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இங்குள்ள ரன்வேயை பழுது பார்க்கும் வேலைகள் நடை பெறவுள்ளன. ஜனவரி 6ம் தேதி இந்தப் பணிகள் தொடங்க வுள்ளன.
இதனால் ஜனவரி 6ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை விமான நிலையம் காலை 8. 30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூடப் படவுள்ளது.
அதற்குப் பிறகு விமான சேவைகளை மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாட்டு விமான நிறுவனங்களும் தங்களது விமான சேவையை மாற்றி யமைத்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னை, திருச்சி, கொச்சி, பெங்களூர், சிங்கப்பூர், மாலே நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.