மீண்டும் சபாஷ் நாயுடு பணி தொடக்கம்.. கமல் !

1 minute read
அறுவை சிகிச்சை முடிந்து ஒய்வெடுத்து வந்த கமல்ஹாசன், மீண்டும் 'சபாஷ் நாயுடு' படத்தின் பணிகளைத் துவங்கி இருக்கிறார். 
மீண்டும் சபாஷ் நாயுடு பணி தொடக்கம்.. கமல் !
அமெரிக்காவில் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதற்கட்ட பணிகளை முடித்து விட்டு சென்னை திரும்பினார் கமல்ஹாசன். 

அலுவலகத்தில் மாடிப்படியில் இறங்கும் போது கீழே விழுந்ததால், பலத்த அடிபட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவருடைய இல்லத்தில் தொடர் ஒய்வில் இருந்து வந்தார் கமல். இதனால் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு மற்றும் வெளியீடு உள்ளிட்ட விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், "மீண்டும் பணிகளைத் தொடங்கி விட்டேன். வேலை நிமித்தமாக ஓடத் தயாராகி வருகிறேன். 
மனம் உயரே பறக்கிறது. அது வெறும் தவறி விழுந்த சம்பவம் என்று முடித்து விட முடியாது. அதனுடன் ஒரு கதை சொல்லியாக வேண்டும். 

இன்னொரு தருணத்தில் அதை உங்களுடன் பகிர்கிறேன். மருத்து வர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், பிசியோக் களுக்கும் நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரம்மானந்தம், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்களிடம் படப்பிடிப்பு தேதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் கமல்ஹாசன். 
அடுத்த மாதம் கொச்சியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings