பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா | Bacteria feeding on plastic !

பிளாஸ்டிக்கினால் ஆகும் பொருட்கள் மட்காமல் மலை போல் பெருகி உலகின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. மறுசுழற்சி செய்ய இயலாத பிஇடி பாலிமரான 
இவ்வகை பிளாஸடிக்குகளை சிதைக்கும் திறனுடைய பாக்டீரியாவை கண்டறிந்து ஜப்பான் விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்திருக்கிறது. 

இக்கண்டுபிடிப்பு பிளாஸ்டிக்குகளின் மறுசுழற்சிக்கு பேருதிவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு பிளாஸ்டிக்குகளை சிதைக்கும் சில பூஞ்சை இனங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும் 

அதன் வேகம் மிக மிகக் குறைவாக இருந்ததால், மறுசுழற்சிக்கு அதனை பயன்படுத்த முடியாதது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings