பரோடா வங்கியில் அதிகாரி ஆக !

தற்போது பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் காலம் என்று சொல்லலாம். காரணம் பட்டதாரிகளுக்கு வங்கி வேலை வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 
பரோடா வங்கியில் அதிகாரி ஆக !
ஒருபுறம் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking personnel Selection-IBPS) பல்வேறு பொதுத்துறை வங்கிகளுக்கு எழுத்தர்களையும், 

அதிகாரிகளையும் தேர்வு செய்வதற்காகத் தேர்வு நடத்துகிறது. இன்னொரு புறம் பாரத ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகள் தேர்வு நடத்தி அதிகாரிகளைத் தேர்வுசெய்து வருகின்றன.

படிப்போடு வேலை

இன்னும் ஒரு படி மேலாக, ஐடிபிஐ, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் தாங்களே வங்கி சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்க வைத்துப் 

பின்னர் அவர்களைத் தங்கள் வங்கிகளில் பணியமர்த்திக் கொள்கின்றன. இந்த வரிசையில் தற்போது பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியும் சேர்ந்துள்ளது.
பரோடா வங்கியானது அதிகாரி (Probationary Officer) பணியில் 400 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப முடிவு செய்துள்ளது. 

இதற்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்து அவர்களை வங்கி நிர்வாகம் சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்க வைத்துப்

பின்னர் அவர்களைத் தனது வங்கியிலேயே பணியமர்த்தவும் முடிவு செய்திருக்கிறது. 

தேர்வு செய்யப்படும் நபர்கள் பரோடா மணிபால் ஸ்கூல் ஆஃப் பேங்கிங் என்ற நிறுவனத்தில் வங்கி மற்றும்

நிதி தொடர்பான முதுகலைப் பட்டச் சான்றிதழ் படிப்பில் (Post Graduate Certificate in Banking and Finance) படிக்க வைக்கப் படுவார்கள். 

இது 9 மாத காலப் படிப்பாகும். இதற்கான படிப்புச் செலவு ரூ.3.45 லட்சத்தை பரோடா வங்கி கல்விக் கடனாக வழங்கி விடும்.

இந்தக் கடனுக்கு மிகக் குறைந்த வட்டியே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
என்ன கேட்பார்கள்?

இந்தச் சான்றிதழ் படிப்பை முடித்த பிறகு அவர்கள் பரோடா வங்கியில் ஏதேனும் ஒரு கிளையில் பணியில் சேர வேண்டும்.

அங்கு 3 மாத காலப் பயிற்சியை முடித்த பின்பு அவர்களுக்கு வங்கி மற்றும் நிதி தொடர்பான முதுகலைப் பட்டயத்தை (Post Graduate Diploma in Banking and Finance) மணிபால் பல்கலைக் கழகம் வழங்கும்.

அதன் பின்னர் அவர்கள் பரோடா வங்கியில் அதிகாரியாகப் பணியமர்த்தப் படுவார்கள்.

வங்கி அதிகாரி பணியில் சேர வகை செய்யும் மேற்கண்ட சான்றிதழ் படிப்பில் சேரப் பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம்.

குறைந்த பட்சம் 60% மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளி களாக இருந்தால் 55% மதிப்பெண் போதுமானது. 
வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கும், மாற்றுத் திறனாளி களுக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதி முறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, உளவியல் தேர்வு (Pschometric Assessment), குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படு வார்கள்.

ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 25-ம் தேதி தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற வுள்ளது. 

எழுத்துத் தேர்வில் ரீசனிங், கணிதம், பொது அறிவு, பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் தலா 50 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.
இது தவிர ஆங்கிலத்தில் விரிவாக விடை யளிக்கும் ஒரு பகுதியும் இருக்கும்.  தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் ஆகஸ்டு மாதம் 21-ம் தேதிக்குள்

ஆன்லைனில் (bankofbaroda.co.in) விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை பரோடா வங்கியின் இணைய தளத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
Tags:
Privacy and cookie settings