நமது உடலில் நடக்கும் சில விஷயங்களே ஏன் நடக்கிறது, எவ்வாறு நடக்கிறது என வியப்படைய செய்யும்.
அதில் ஒன்று தான் சில சமயங்களில் தூங்கி எழும் போது தொப்புளில் உருவாகி இருக்கும் பஞ்சு பந்து. இது ஏன் உருவாகிறது, எதனால் உருவாகிறது என பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
தொட்டதற்கு எல்லாம் ஆய்வுகள் செய்யும் ஆராய்ச்சியாளர்கள் இதை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?
இது குறித்து ஆய்வுகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தி, தொப்புளில் இந்த பஞ்சு பந்து உருவாவது ஏன் என விடையும் கண்டறியப்பட்டு விட்டது.
தொப்புளில் பஞ்சு போன்று உருவாவது எதனால்?
இந்த ஆய்வு வியென்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
மேலும், இந்த பஞ்சு பந்து உருவாகாமல் இருக்க வேண்டுமெனில், வயிறு பகுதியில் இருக்கும் முடிகளை நீக்கினால் போதுமானது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில் மொத்தம் 5000 பேர் கலந்துக் கொண்டனர். தொப்புளில் உருவாகும் பஞ்சு பந்து சிலருக்கு அதிகளவிலும், சிலருக்கு குறைவாகவும், சிலருக்கு முற்றிலும் உருவாகாமலும் இருந்தது.
மிஸ்டர். பார்கர் என்பவர் கடந்த 1984-ம் ஆண்டிலிருந்து 26 வருடங்கள் (2010 வரை) தொப்புள் சுற்றில்யுள்ள முடிகளில் இருந்து உருவாகும் இந்த பஞ்சு பந்துகளை சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
மிஸ்டர். பார்கர் என்பவர் கடந்த 1984-ம் ஆண்டிலிருந்து 26 வருடங்கள் (2010 வரை) தொப்புள் சுற்றில்யுள்ள முடிகளில் இருந்து உருவாகும் இந்த பஞ்சு பந்துகளை சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.