ரஷ்யாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் கல்லறைக் கற்களால் பாலம் அமைத்துள்ளது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லெமன்ற் என்ற கிராமத்தில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் பாலம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த பாலத்தினை சீரமைத்து தரும்படி அந்த பகுதி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் போதிய நிதி ஆதாரம் இல்லை என கூறி அங்குள்ள நிர்வாகத்தினர் பாலத்தின் சீரமைப்பு பணிகளை தாமதப் படுத்தியே வந்துள்ளனர்.
இதனால் பொறுமை இழந்த அப்பகுதி மக்களுக்கு உதித்த யோசனை தான் இந்த கல்லறைக் கற்களாலான பாலம். இந்த பாலம் அமைந்திருக்கும் பகுதியில் தான் உள்ளது.
தற்போது பயன்பாட்டில் இல்லாத கல்லறைத் தோட்டம் ஒன்று. அங்கிருந்த கற்களை பாலத்திற்காக பயன்படுத்திக் கொள்ள நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் அனுமதி கோரியுள்ளனர்.
இதனையடுத்து அதிகாரிகளுக்கும் இந்த யோசனை சிறப்பாக படவே கிராம மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது மட்டுமல்ல, நிர்வாகத்தினரே முன் நின்று அந்த பகுதியில் புதிய பாலம் ஒன்றை அமைத்து வழங்கியுள்ளனர்.
கல்லறைக் கற்களில் முன்பு இறந்தவர்களின் பெயரும் திகதிகளும் இருந்த போதும் அது ஒன்றும் பெரிதே அல்ல எனவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் அமையப் பெற்றதே அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
மேலும் அவர்களின் மத நம்பிக்கைக்கு விரோதமான செயல் இது என்ற போதும், தற்போது இது கல்லறைக் கற்கள் அல்ல எனவும், திரும்ப பயன்படுத்தும் கற்களாகவே பார்க்கப் படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாலம் அமைந்த பின்னர் சில முதியவர்கள் அந்த பாலத்தை பயன்படுத்த மறுப்பு தெரிவித்ததுடன், அந்த கற்களை பாலமாக பயன்படுத்தியிருக்க கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கல்லறைக் கற்களை பாலமாக பயன்படுத்தியவர்களை கடவுள் தண்டிப்பார் போன்ற கருத்துகள் பரவியதுடன், சில குறிப்பிட்ட பகுதி மக்கள் இந்த பாலத்திற்கு எதிராகவும் களமிறங்கி போராடினர்.
பொதுமக்களின் திடீர் போராட்டம் குறித்து கேள்வியுற்ற அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட இன மக்களின் திடீர் போராட்டத்தினை அடுத்து பாலத்தில் இருந்து கல்லறைக் கற்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டு
அதில் கற்களுக்கு பதிலாக மரப்பலகைகளை கிராம நிர்வாக அதிகாரிகள் பயன்படுத்தி யுள்ளனர்.