பேஸ்புக்குக்கு சவால் விடும் ஷேர் சாட் மொபைல் அப்ளிகேஷன் !

தகவல் பறிமாற்றத்துக்கு உதவும் பேஸ்புக்குக்கு சவால் விடும் வகையில் பிராந்திய மொழிகளில் மெசேஜ் செய்யும் படியான ஷேர் சாட் என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் வடிவமைக்கப் பட்டுள்ளது.
பேஸ்புக்குக்கு சவால் விடும் ஷேர் சாட் மொபைல் அப்ளிகேஷன் !
ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரான பரீத் ஆசான் என்ற மாணவரால் கடந்த 2015-ல் உருவாக்கப்பட்ட ஷேர் சாட் மூலம் பயனாளர்கள், வீடியோக்கள், ஜிஐஎப் படங்கள் மற்றும் இந்தி, மராத்தி, தெலுங்கு 

மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் பாடல்களையும் பறிமாறிக் கொள்ளலாம். 

மேலும், தமிழ், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளையும் இணைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் போன்றே மற்ற பயனாளர்களைப் பின்தொடரும் வசதி மற்றும் அவர்களுக்குப் பிடித்தவற்றைப் பகிரும் வசதியும் இந்த மொபைல் ஆப்பில் உள்ளது. 
வாட்ஸ் அப்பில் ஜோக்குகள் மற்றும் நகைச்சுவையான படங்களைப் பகிருவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த ஆப், தற்போது முழுமையான சமூக வலைதளமாக உருவெடுத்துள்ளது. 

மேலும், பயனாளர்களுக்கு உபயோகமான உடல்நலக் குறிப்புகளையும் ஷேர் சாட் வழங்குகிறது.
Tags:
Privacy and cookie settings