மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி தன்னிடம் கட்டாயப்படுத்தி கடிதம் வாங்கப் பட்டதாகவும்,
முதல்வர் ஜெயலலிதா தன்னை அறைந்ததாகவும் அதிமுகவி லிருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா புகார் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை நாடாளுமன்றத்தில் சசிகலா புஷ்பா எழுப்பிய பிரச்சினைக்குப் பிறகு, வடக்கு அவென்யூவில் உள்ள அரசு குடியிருப்பில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
திமுக உறுப்பினர் சிவாவை தாக்கிய விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெய லலிதா நேற்று என்னை அழைத்துப் பேசினார்.
அப்போது தம்பிதுரை உடனி ருந்தார். என்னை ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் ஜெயலலிதா மிரட்டினார். மேலும் அவர் என்னை அறைந்தார்.
ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் சேர்ந்து என்னிடம் ராஜினாமா கடிதத்தை மிரட்டி வாங்கினர். ஆனால் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன்.
இன்று (நேற்று) என்னை கட்டாயப் படுத்தி துணை சபாநாயகர் தம்பிதுரை, சில அதிமுக உறுப்பினர்கள் மாநிலங்களவை தலைவரிடம் அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நான் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனக் கூறி விட்டேன். பயப்படும் பின்புலத்தில் இருந்து நான் வரவில்லை. இருப்பினும், இனி கண்டிப் பாக எனக்கு மிரட்டல் இருக்கும்.
என்னையும் எனது குடும்பத்தாரையும் மிரட்டுவார்கள். எனது கணவர் லிங்கேஸ்வர் பிரசாத்தின் கோப்புகளை எடுத்து ஆராய்ந்து, எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம்.
என்னை நம்பி வாக்களித்த மக்களுக்காக நான் தூத்துக்குடியின் மேயராக சேவை செய்தேன். இதில் திறமையாகப் பணியாற்றியதால் தான் எனக்கு தற் போதைய பதவியை முதல்வர் அளித்தார்.
நான் ராஜினாமா செய்து விட்டால் பயந்து விட்டதாகவும், தவறு செய்ததாகவும் அர்த்தம் ஆகி விடும். நான் எந்த தவறும் செய்யவில்லை.
திருச்சி சிவாவுடன் விமான நிலையத்தில் நடந்த சம்பவத் துக்கும், என்னை ராஜினாமா செய்யும்படி கூறியதற்கும் எந்த தொடர்பும் கிடையாது.
சிவா விஷயம் எதிர்பாராமல் நடந்தது. அதை இதனுடன் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே தான் அவரி டம் நான் நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கேட்டு விட்டேன். யாரும் தனது தலைவரைப் பற்றிப் பேசினால் உணர்ச்சி வசப்படுவார்கள்.
அப்படி நான் செய்த செயலுக்கு அந்த தலைவரே எனக்கு ஆதரவு தரவில்லை. எனவே, கனிமொழி மூலமாக நான் சிவாவிடம் மன்னிப்பு பெற்றுக் கொண்டேன்.
என்னிடம் இந்த பதவியை பறித்து அதை வேறு யாருக்கோ அளிப்பதற்காக என் மீது கடந்த நான்கு, ஐந்து மாதங்களாகவே குற்றச் சாட்டுக்களை கிளப்பி வருகின்றனர்.
படங்களில் என் தலையை மாற்றி, வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நான் தமிழக காவல் துறையினரிடம் அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனக்கு இந்த பதவியை அளித்த முதல்வர் ஜெயலலிதா என்னை அழைத்து, நீ ராஜினாமா செய்து விட்டு வேறு பணி செய்.
உனது பதவியை நான் வேறு ஒரு வருக்கு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தால் நான் சந்தோஷமாக செய்தி ருப்பேன்.
ஆனால், நேற்றுமுன்தினம் அவரை சந்தித்த போது அங்கிருந்தவர்கள் என்னை நடத்திய விதம் பிடிக்கவில்லை.
இது குறித்து அன்றைய இரவு முழுவதும் யோசித்தேன். எனது கணவரும் ராஜி னாமா செய்து விடு. முதலமைச்சரை எதிர்த்து தமிழகத்தில் இருக்க முடியாது எனக் கூறினார்.
பின்னர், மத்திய அரசு சார்பில் மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் பாது காப்பு அளிக்கப்படும் என உறுதி அளித் தார். இதையும் மீறி நான் போராடத் தயாராக இருக்கிறேன்.
எனக்கு காங்கிரஸ், திமுக உட்பட பலரும் நாடாளுமன்றத்தில் அளித்த ஆதரவு அரசியலுக்கு அப்பாற் பட்டது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.