சீனாவின் அகலப் பேருந்து துவக்கம் !

சீனாவில்‌ அதிக அகலம் மற்றும் தரையிலிருந்து அதிக ‌உயரத்தில் அடிப்பாகம் இருக்கும் வகையில் வடிவமைக‌கப்பட்ட புதிய ரக பேருந்து நேற்று வெற்றிகர‌மாக சோதனை செய்யப்பட்டது. 
சீனாவின் அகலப் பேருந்து துவக்கம் !
தரையில் இருந்து சுமார் 6அடி உயரத்தில் இதன் அடிப்பாகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்தப் பேருந்தின் நீளம் 72 அடிகள் , அகலம் 25 அடிகள்.

ஹூபேய் மாகாணத்தின் குயின்ஹூவாங்டாவோ நகரில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக பாதையில் இந்தப் புதிய பேருந்து இயக்கி சோதனை செய்யப்பட்டது.

மின்சாரத்தில் இயங்கும் இந்தப் பேருந்து ஒரே நேரத்தில் ஆயிரத்து 400 பேரை ஏற்றிச் செல்லும் திறன் உடையது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்தப் பேருந்து 40 சாதாரண பேருந்துகளுக்குச் சமமானது. 
இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் ஆண்டொன்றுக்கு சுமார் 800 டன்கள் எரிபொருளை சேமிக்க வழி பிறக்கும் என்று இதன் தலைமை வடிவமைப்பாளர் சோங் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings