ரத்ததானம் அப்பாவிகளுக்கு பரவிய ஹெச்.ஐ.வி !

கடந்த 17 மாதங்களில் பரிசோதிக்கப் படாத ரத்தம் ஏற்றியதால், இந்திய அளவில் 2 ஆயிரத்து 234 பேர் ஹெச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு ஆளாகி யிருக்கிறார்கள். 
ரத்ததானம் அப்பாவிகளுக்கு பரவிய ஹெச்.ஐ.வி !
தமிழகத்திலும் 89 பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்’ சமீபத்தில் வெளியான இ்ந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யிருக்கிறது. 

மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் சேத்தன் கோத்தாரியினால் இத்தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரத்தம் ஏற்றியதால் ஹெச்.ஐ.வி. வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சேத்தன் கோத்தாரி விண்ணப் பித்திருந்தார். 

இதற்கு பதில் அளித்த தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் புள்ளி விபரத்தில் தான் இந்த உண்மை வெளி வந்திருக்கிறது. அதிக பட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 361 பேர் ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அடுத்த படியாக குஜராத்தில் 292 பேரும், மராட்டியத்தில் 276 பேரும், டெல்லியில் 264 பேரும் ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகி யிருக்கிறார்கள்.

அரசு மருத்துவ மனைகள்,  ரத்த வங்கிகளில் போதிய ஆய்வக வசதிகள் இல்லாதது, ஊழியர்களின் அலட்சியம் ஆகியவற்றால் 

இது போன்ற மாபெரும் தவறுகள் நேரிடுகின்றன என்று குற்றம் சாட்டியிருக்கிறார் சேத்தன் கோத்தாரி. 
சமீபத்தில் அசாம் மாநிலத்தில் தீக்காயத்துக் காக சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட 3 வயது குழந்தையும், ரத்தம் ஏற்றியதன் மூலம் ஹெச்.ஐ.வி. தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.

ரத்தம் தானமாகப் பெறும் போதும் சரி... நோயாளிக்கு தானமாகக் கொடுக்கும் போதும் சரி... பல்வேறு பரிசோதனைகளும் நடைமுறைகளும் கவனமாகப் பின்பற்றப் படுவதாகவே மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

அதன் பிறகும் எப்படி இந்தத் தவறு நடக்கிறது? சென்னை அரசு பன்னோக்கு மருத்துவ மனையின் ரத்த வங்கி மருத்துவரான தமிழ்மணியிடம் கேட்டோம்…ரத்த தானம் பெறப்படுவதில் பல விதிமுறைகள் இருக்கிறது. 

ஹெச்.ஐ.வி., ஹெப்படைட்டிஸ் பி, மஞ்சள் காமாலையின் ஒரு வகையான ஹெச்.சி.வி., வி.டி.ஆர்.எல் என்கிற பால்வினை நோய், மலேரியா உள்பட 5 பரிசோதனை களும் செய்த பிறகுதான் ரத்தம் தானமாகப் பெறப்படும்.

சின்ன ரத்த வங்கி, பெரிய மருத்துவமனை எதுவாக இருந்தாலும் இது கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய பரிசோதனை. அங்கீகரிக்கப் படாத ரத்த வங்கிகள், 

பரிசோதனை நிலையங்களில் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அங்கு இதுபோன்ற தவறு நடந்திருக்கலாம்’
இது போன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தத் தவறை ஒவ்வொரு கட்டத்திலும் தடுக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு. 

முதலில் ரத்த தானம் செய்யும் தகுதி நமக்கு இருக்கிறதா என்று ஒரு கொடையாளி தன்னைத் தானே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். 

மது அருந்தியவர்கள் ரத்தம் கொடுக்க முடியாது என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. 

அதுபோல, மேற்கண்ட 5 நோய்களுக்கு ஆளாகி யிருப்பவர்கள் தானம் செய்யக் கூடாது என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். இதன் மூலம் தானம் கொடுக்க நினைக்கும் ஆரம்ப கட்டத்திலேயே இந்தத் தவறை சரி செய்ய முடியும். 
ரத்ததானம் அப்பாவிகளுக்கு பரவிய ஹெச்.ஐ.வி !
தான் பாதிக்கப்பட்டது தெரியாமல் நல்லெண்ண அடிப்படையிலும் ஒருவர் ரத்த தானம் செய்ய வரக்கூடும். அப்படி வருகிற எல்லோரது ரத்தத்தையும் ரத்த வங்கிகள் பெற்றுக் கொள்வதும் கூடாது. 

எங்களிடம் ரத்த தானத்துக்கான ஆலோசகர்கள் இருக்கிறார்கள். ரத்த தானம் செய்ய வருகிறவர் களிடம் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரிடமும் விசாரிப்பார்கள்.

அதன் பிறகு, மருத்துவர்கள் ரத்த தானம் செய்ய வந்தவரிடம் விசாரிப்பார்கள். இந்த இரண்டு கட்ட விசாரணை யிலேயே வந்திருப்பவர் ரத்த தானம் செய்யத் தகுதி உள்ளவரா, தகுதி யில்லாதவரா என்பது தெரிந்து விடும்.

சிலர் பணத்துக்காக ரத்தம் விற்பதற்காக வருவார்கள். அவர்களைப் பார்த்தாலே அடையாளம் தெரிந்து தவிர்த்து விடுவோம். 

போதைப் பழக்கத்துக்கு ஆளாகி யிருப்பவர்களை யும் ஓரளவு பார்த்தவுடனே தெரிந்து கொள்ள முடியும்.

Donors selection என்கிற இந்தக் கட்டத்தில் கவனமாக இருக்கும் போது தகுதியில்லாதவ ரிடமிருந்து ரத்தம் பெறுவதைத் தவிர்த்து விட முடியும். 

ஒருவர் தானம் செய்வதற்காக ஆர்வத்துடன் இருக்கிறார். ஆனால், அவர் மீது சந்தேகம் வரும் பட்சத்தில் ICTC (Integrated Counselling & Testing Centre) க்கு அனுப்பி சோதனை செய்வோம். 
இதன் மூலமும் தவறுகள் தவிர்க்கப்பட்டு விடும். இந்தியாவிலேயே ரத்ததானம் செய்கிற வர்களில் தமிழகம் தான் முதல் இடத்தில் இருக்கிறது.

அந்த அளவுக்குப் பலர் தன்னார் வத்துடன் ரத்ததானம் செய்கிறார்கள். தானே நல்லது செய்ய வேண்டும் என்று வருகிறவர்களிடம் பெரும்பாலும் தவறுகள் இருப்பதில்லை. 

இவர்களில் பலர் மாணவர்கள் என்பதால், 18 முதல் 35 வயதுக்குட்ப ட்டவர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தத்தில் பிரச்னைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. 

ஒரு தன்னார்வலர் ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்கிறவராக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் இந்த பரிசோதனைகள் செய்த பிறகே ரத்தம் பெறப்படுகிறது...’’

தானம் பெறப்பட்ட பிறகு வேறு சோதனைகள் எதுவும் இருக்குமா?
அரசு மருத்துவ மனைகளைப் பொறுத்த வரை ஒரு ரத்த வங்கியில் 12 முதல் 20 பேர் வரை இதற்காகவே செயல்படுகிறார்கள். 

செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆலோசகர்கள், மருத்துவர்கள் என்று இதற்கென ஒரு குழுவே இயங்குகிறது. 

இதில் தானம் பெறப்பட்டவரின் 350 மி.லி. ரத்தம் குளிர்சாதன வசதியுடன் பாதுகாக்கப்படும். அதிலிருந்து 10 மிலி ரத்த மாதிரியை எடுத்துத் தான் இந்த பரிசோதனைகள் செய்வார்கள்.

இது லேப் 1ல் நடக்கும் வேலை. அதன்பிறகு, லேப் 2ல் மருத்துவ அதிகாரி ஒருவர் இறுதியாக ரத்தத்தின் தரத்தை ஆய்வு செய்வார். 

அதன் பிறகே நோயாளிக்குக் கொடுக்கப்படும்... விண்டோ பீரியடில் இருக்கும் நோயாளியினை அடையாளம் காண முடியாது தான் இந்தத் தவறுக்குக் காரணம் என்கிறார்கள். 
அது என்ன விண்டோ பீரியட்? ஒருவருக்கு நீண்ட நாட்களாக ஒரு நோய் இருந்தால், அது வழக்கமான பரிசோதனை  களிலேயே தெரிந்து விடும்.

ஆனால், ரத்த தானம் செய்யும் 2 நாட்களுக்கு முன் ஒருவர் பாலியல் உறவு கொண்டிருக்கிறார் அல்லது ஹெபடைட்டிஸ் தாக்கத்துக்கு ஆளாகி யிருக்கிறார் என்றால் அதை வழக்கமான பரிசோதனை களில் கண்டுபிடிக்க முடியாது. 

நோயின் தாக்கத்தை அடையாளம் காண முடியாத இந்த 2 நாட்களைத் தான் Window period என்கிறோம். வழக்கமான 5 பரிசோதனைகளில் சரியாக இருந்து, இந்த விண்டோ பீரியட் கட்டத்தில் தவறு நடந்துவிட வாய்ப்பு உண்டு.

அதுபோன்ற விண்டோ பீரியடில் இருக்கும் ரத்த மாதிரியைப் பார்க்கும் போதே மருத்துவர்களால் தெரிந்து கொள்ள முடியும். சந்தேகத்தை உறுதிப்படுத்து வதற்காக 
ரத்ததானம் அப்பாவிகளுக்கு பரவிய ஹெச்.ஐ.வி !
அடுத்த கட்டமாக Advanced Elisa என்ற நவீன பரிசோதனை இப்போது வந்திருக்கிறது. இப்போது அதைவிட நவீனமான NAT என்ற Nucleic Acid Test பரிசோதனை இருக்கிறது.

இதன் பிறகு, ரத்தம் தகுதியானது தான் என்று மருத்துவர் உறுதி செய்த பிறகே நோயாளிக்கு ரத்தம் போகும்...’ தமிழகத்திலும் 89 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி யிருக்கிறதே…

‘ஊடகங்களில் செய்தியாக வெளியானது தவிர, அரசு ரீதியாக எங்களுக்கு அதுபோல எந்தத் தகவலும் இல்லை.

ரத்த வங்கிக்கான உரிமம் இல்லாத, ரத்தம் சரியாகப் பராமரிக்கப் படாத, தொடர்ச்சியாக சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால், 

எந்த வசதியும் இல்லாத மருத்துவ மனைகளில் இந்தத் தவறுகள் நடந்திருக்கலாம். 

அரசு மருத்துவ மனைகளிலும் முன்பு நவீன கண்டுபிடிப்பு வசதிகள் இல்லாத போது ரத்தத்தின் மூலம் ஹெச்.ஐ.வி. போன்ற நோய்கள் பரவி யிருக்கலாம். 

இப்போது Advanced Elisa, NAT போன்ற பரிசோதனைகள் வந்து விட்டதால், அந்த நிலை இல்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மற்ற மாநிலங்களில் என்ன நிலவரம் என்பது பற்றி தெரியவில்லை. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மருத்துவ மனைகளினால் இந்தத் தவறு நடந்திருப் பதற்கு வாய்ப்பே இல்லை. 

ஒரு நோயாளிக்குத் தான் பெற்றுக் கொள்ளப் போகும் ரத்தம் எங்கிருந்து, யாரிடமிருந்து வருகிறது என்பது தெரிந்திருக்க வேண்டும். 
ஒரு ரத்த வங்கி அங்கீகாரம் பெற்றிருந்தாலும் அந்த உரிமத்தைக் குறிப்பிட்ட இடைவெளியில் புதுப்பித்திருக் கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். 

ரத்தம் தேவைப் பட்டால் உடனடியாக அரசு மருத்துவ மனைகளை அணுகுவது எப்போதும் நல்லது. 

அரசு மருத்துவ மனைகளில் தீவிர கண்காணிப்பு இருப்பதால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. இத்துடன் நம்பிக்கைக்குரிய தரமான தனியார் ரத்த வங்கிகளையும் தனியார் மருத்துவ மனைகளையும் அணுகலாம்!

ரத்த தானம் பெறுகிறவர்கள் கவனத்துக்கு…

மருத்துவ மனையில் ரத்தம் கிடைக்காத பட்சத்தில், நோயாளியின் உறவினர் களையே சில நேரங்களில் ரத்தம் ஏற்பாடு செய்யச் சொல்வார்கள். 

அந்த மாதிரியான நேரங்களில் தான் தவறான இடங்களில் சென்று மாட்டிக் கொள்வார்கள். அந்த நேரத்தில் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு அங்கீகரிக்கப் பட்ட ரத்த வங்கியில் ரத்தம் வாங்க வேண்டும். 

அரசு மருத்துவ மனைகள், அரசு அங்கீகரித்திருக்கும் ரத்த வங்கிகள், தரமான முன்னணி தனியார் மருத்துவ மனைகளில் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ரத்தம் தேவைப்படும் நோயாளியின் ரத்த மாதிரியையும் தானம் கொடுக்கும் ரத்த மாதிரியையும் பரிசோதிக்க வேண்டும். 
இதற்கு Cross Matching என்று பெயர். அதாவது, இரண்டு பேரின் ரத்தமும் பொருந்திப் போகுமா என்ற கிராஸ் மேட்ச்சிங் பரிசோதனையை செய்த பிறகே, ரத்தம் ஏற்ற வேண்டும். 

தானம் கொடுப்பவர், தானம் பெறுகிறவர் இருவருக்கும் ஒரே பிரிவாக இருந்தாலும், தானம் கொடுத்தவர் முழு ஆரோக்கி யத்துடன் இருந்தாலும், இந்த கிராஸ் மேட்ச்சிங் பரிசோதனை அவசியம்.

சில மருத்துவ மனைகளில் கிராஸ் மேட்ச்சிங் செய்யும் வசதி இருக்காது. அதுபோன்ற வசதிகள் இல்லாத மருத்துவ மனைகளைத் தவிர்க்க வேண்டும். 

Live Donor என்ற தானம் அளிப்பவரை நாமே அழைத்துச் செல்ல விரும்பினாலும், 
ரத்ததானம் அப்பாவிகளுக்கு பரவிய ஹெச்.ஐ.வி !
அது ரத்தப் பரிசோதனை செய்யத் தகுதி வாய்ந்த மருத்துவ மனையாக இருக்க வேண்டும். ரத்தத்தைப் பரிசோதனை செய்யும் வசதிகள் இல்லாத மருத்துவ மனைக்கு லைவ் டோனரை அழைத்துச் செல்லக் கூடாது.

லாப நோக்கத்துக் காக செயல்படும் சில தனியார் ரத்த வங்கிகளில் நோயாளியின் உறவினர்கள் அவசரப் படுத்தும் பட்சத்தில் கிராஸ் மேட்ச்சிங் செய்யாமலேயே கூட கொடுத்து விடலாம். 

இந்தப் பரிசோதனைக்கு 45 நிமிடங்கள் வரை தேவைப்படும். அதனால், நோயாளியின் உறவினர்கள் பொறுமையுடன் செயல்படுவதே நல்லது. 

ரத்தம் தேவைப்படும் நோயாளியின் ரத்த மாதிரியை (Blood Sample) எடுத்துச் செல்ல வேண்டும். 

நோயாளிக்கு ரத்தம் தேவைப் படுகிறது என்பதற்காக மருத்துவர் பரிந்துரைச் சீட்டு ஒன்று தருவார். Requisition Slip என்ற அந்த பரிந்துரைச் சீட்டையும் மறக்காமல் ரத்த வங்கிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
தானம் பெறச் செல்லும் ரத்த வங்கி பற்றி சந்தேகம் இருக்கும் பட்சத்தில், அவர்களது உரிமம் பற்றிக் கேட்கும் அதிகாரம் நமக்கு உண்டு. ஹெச்.ஐ.வி. மட்டுமே உயிர்க்கொல்லி கிடையாது. 

ஹெபடைட்டிஸ் பி, ஹெபடைட்டிஸ் சி, ஹெச்1என்1 போன்றவையும் ஆபத்தான உயிர்க் கொல்லிகள் தான். அதனால், ரத்த தானம் பெறும் போது மிக மிக கவனமாக இருப்பது நமக்குத் தான் நல்லது.
Tags:
Privacy and cookie settings