மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான அனுமதியைப் பெற அந்த மாநில சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 26ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், வெஸ்ட் பெங்கால் என்ற பெயர் பெங்கால் என மாற்றப்படுவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
ஆங்கிலத்தில் பெங்கால் என்றும், வங்காள மொழியில் பங்கோ அல்லது பங்ளா என்றும் பெயர் மாற்றம் செய்ய மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசின் அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2011ம் ஆண்டில் பச்சிம் பங்கோ என மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற மாநில அரசு அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
இதற்கிடையே, இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜிஎஸ்டி மசோதாவை அங்கீகரிப்பதற்கான விவாதமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.