ரியோ ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் பதக்கங்களின் விலை மற்றும் தயாரிக்கப்பட்ட உலோகம் அதன் மதிப்பு விவரம் வருமாறு:
இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் பதக்கம் 2 ,488 ஆகும் . தங்கம் 812, வெள்ளி 812. வெண்கலம் 864. இதில் தங்க பதக்கம் என்பது முழுவதும் தங்கத்தாலானது அல்ல.
அதாவது 93 சதவீத வெள்ளியும், 6 சதவீத செம்பும், ஒரு சதவீதம் மட்டுமே தங்கம். 494 கிராம் வெள்ளியும், 6 கிராம் தங்கமும் கலந்து இந்த பதக்கம் செய்யப் பட்டிருக்கும்.
இந்த தங்க பதக்க மதிப்பு ரூ. 43 ஆயிரத்து 237 ஆகும். இதுபோல் வெள்ளி முழு வெள்ளியால் ஆனது அல்ல . வெள்ளி 92.5 சதவீதம் ஆகும்.
7. 5 சதவீத செம்பும் கலந்திருக்கும். வெள்ளி பதக்க மதிப்பு ரூ.22 ஆயிரத்து 155. வெண்கலம் 97 சதவீத செம்பு கலந்து செய்யப் பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ. 335 ஆகும் .
ஒலிம்பிக் மற்று பாரா ஒலிம்புக்கான மொத்தம் 5 ஆயிரத்து 130 பதக்கங்கள் தயாரிக்கப் பட்டுள்ளது.
ரியோவில் உள்ள பிரேசில் நேஷனல் மின்ட் என்ற நிறுவனத்தில் இந்த பதக்க தயாரிப்பில் 80 பேர் ஈடுபட்டனர். ஒரு பதக்கம் தயாரிக்க 2 நாட்கள் செலவிடப் பட்டுள்ளது.