இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கலந்து கொண்டார்.
விழாவுக்கு வந்திருந்த அவர் பிரதமர் மோடியின் படங்கள் அச்சிடப்பட்ட ஆபாச உடையை அணிந்திருந்தார்.
இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை, ராக்கி சாவந்த் அவமதித்து விட்டதாக பெரும் சர்ச்சையும் கிளம்பியது.
இதைத் தொடர்ந்து ராக்கி சாவந்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் மீரட் நகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் நிதின் அலுவாலியா கூறுகையில்,
ராக்கி சாவந்த் மீது பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், அவமதிக்கும் நோக்கில் வேலைப்பாடு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி அதன் அடுத்தகட்ட விசாரணையை 17–ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.