இளமையில் காதலை மறக்க கை கொடுக்காத மறதி, முதுமையில் பல நேரங்களில் தொல்லை களையே கொண்டு வருகிறது. தம்முடைய 20, 30களில் ஏகப்பட்ட விஷயங்களை
நினைவில் வைத்துக் கொள்ள முடிந்த ஒருவருக்கு, 40, 50களில் கண்முன்னே கேட்டுக் கொண்டிருக்கும் உரை யாடல்களில் கூட தொடர்ந்து கவனம் செலுத்த முடிவதில்லை.
ஒருவரிடம் பேசும் போது அவரின் பெயர் நினை வில்லாமல், பேசி முடித்து, வீட்டுக்கு வந்தும் அவரது பெயரை நினைவு படுத்திப் பார்ப்பார்கள். சில நேரங்களில் அவரது பெயர் நினைவுக்கு வராமலேயே போய்விடும்.
அதற்காக ‘ஓகே கண்மணி’ பவானி ஆன்ட்டி போல நமக்கு ‘அல்சைமர்’ வந்து விடுமோ என்று அஞ்சாதீர்கள். நல்ல வேளையாக எல்லா ஞாபக மறதியும் அல்சைமரின் அறிகுறி இல்லை!
உடலை உறுதியாக்க உடற்பயிற்சி செய்வது போலவே, மூளைக்கு அளிக்கப்படும் பயிற்சிகளும் நினைவுத் திறனை வலுப்படுத்துபவை. நினைவுத் திறனை அதிகப் படுத்தக்கூடிய பயிற்சிகளையே ஆராய்ச்சிகளும் வலியுறுத்து கின்றன.
எந்த வேலையும் இல்லாமல் தனிமையில் அமர்ந்திருக்கும் போது எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டி ருப்பதற்கு மாற்றாக, இசைக்கருவி வாசிக்க கற்றுக் கொள்ளலாம்...
பத்திரிகைகளில் வெளிவரும் குறுக்கெழுத்துப் போட்டிகளை முயற்சிக்கலாம். தோட்டப் பராமரிப்பு, பறவைகள் வளர்ப்பது, கைவேலை கற்றுக் கொள்வது என ஏதேனும் பொழுது போக்குகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
நட்பு வட்டங்களை அதிகப் படுத்தி, அவர்களுடனான அரட்டைகளில் உலக நடப்புகளை அறிந்து கொள்ளலாம் (அக்கம்பக்கத்து வம்புகள் நீங்கலாக!).
எல்லா வற்றுக்கும் மேலாக... புத்தகம் படிக்கும் பழக்கம் ஒருவரின் மூளையை எப்பொழுதுமே சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளும் போது எப்பொழுதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதனால் நேர்மறையான சிந்தனைகள் பெருகி நினை வாற்றல் வளரும்.
ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப கேட்பது, அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் அல்லது வார்த்தை களைக் கூட மறந்து போவது, நன்றாகத் தெரிந்த இடத்துக்குச் செல்லும் வழியை மறப்பது,
நம் வீட்டுக்குச் செல்லும் வழியையே மறப்பது மற்றும் இடக் குழப்பம் போன்ற ஒருவரின் நடவடிக்கைகள் உச்சக்கட்ட மறதியின் அறிகுறிகள். இவை அசாதாரண மானவை.
வயதானவர்கள் பிற நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகள், கீழே விழுவதால் தலையில் அடிபடுதல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் போன்றவற்றால் அசாதாரண மறதி ஏற்படுகிறது.
மருத்துவரை அணுகி ’ஞாபகமறதி நோய்’ (Dementia) இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, சரியான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை களை மேற்கொள்ளும் போது ‘அல்சைமர்’ நம்மை அண்டாது!
புத்தகம் படிக்கும் பழக்கம் ஒருவரின் மூளையை எப்பொழுதுமே சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற வற்றை மேற்கொள்ளும் போது எப்பொழுதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முடியும்!
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற வற்றை மேற்கொள்ளும் போது எப்பொழுதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முடியும்!