விரட்டிய யானையிடமிருந்து உயிர் பிழைத்த விவசாயி !

சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானையிடமிருந்து தப்பிக்க இறந்தவர் போல் நடித்து விவசாயி ஒருவர் உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரட்டிய யானையிடமிருந்து உயிர் பிழைத்த விவசாயி !
சத்தியமங்கலம் வனப்பகுதியை அடுத்த கடம்பூர் காப்புக்காடு குன்றி மலை கிராமத்தை சேர்ந்த விவசாயி தொட்டு சித்தையா (வயது 55) மாடுகள் வளர்த்து வருகிறார்.

இவரது மாடுகள் மர்ம நோயால் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் வனப்பகுதிக்கு சென்று மூலிகை செடி பறிக்கச் சென்றுள்ளார் சித்தையா. மூலிகை செடிகளை பறித்துக் கொண்டு அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள ஒரு வனக்குட்டையில் தண்ணீர் குடித்து கொண்டு ஒரு யானை சித்தையாவை விரட்டியுள்ளது.

யானையிடமிருந்து தப்பிக்க ஓடிய சித்தையாவை யானை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதனால் 10 அடி தூரம் பறந்து போய் விழுந்து படுகாய மடைந்துள்ளார்.
அந்த யானை அவரை மீண்டும் தாக்க ஓடி வந்ததுள்ளது. இதை கண்ட அவர் வலியுடன் இறந்தவர் போல் அப்படியே கை-கால் அசைக்காமல் கிடந்துள்ளார்.

அவர் அருகே வந்த அந்த யானை அவரது உடலை காலால் தள்ளி புரட்டிப் பார்த்துள்ளது. அவர் அசைவற்று கிடந்ததால் அந்த யானை அங்கிருந்து சென்றுள்ளது.

அந்த யானை வெகு தூரம் சென்ற பிறகு அவர் தனது ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே அவரது உறவினர்களும் பொதுமக்களும் ஓடி வந்து படுகாயத்துடன் துடித்த தொட்டு சித்தையாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:
Privacy and cookie settings