தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த கர்நாடக விவசாயிகள் மைசூருவில் தமிழ் திரைப்படம் திரையிடலை முடக்கி, போஸ்டர்களை கிழித்தனர்.
அக்ரஹாரா சர்க்கிளில் உள்ள பத்மா தியேட்டரில் தமிழ்த் திரைப்படம் பயம் ஒரு பயணம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஆர்பாட்டக் காரர்கள் போஸ்டரைக் கிழித்து எரித்தனர்.
தியேட்டருக்குள் நுழைந்து படம் பார்த்தவர்களை விரட்டி அடித்தனர்.
சிஏடிஏ அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள் அங்கு தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதை எதிர்த்து கடுமையாக கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.