சுவிட்சர்லாந்து நாட்டில் குறைந்த வயதில் கட்டாயப் படுத்தி நிகழ்த்தப்படும் திருமணங்கள் அதிகரித் துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி யுள்ளன.
சுவிஸின் zwangsheirat.ch என்ற இணையத் தளம் கட்டாய திருமணங்கள் குறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இதில், கடந்த 7 மாதங்களில் மட்டும் குறைந்த வயதில் கட்டாயப் படுத்தப் பட்டு 119 திருமணங்கள் நடந்துள்ள தாகவும், இவற்றில் 26 திருமணங்களில் 16 வயதுக்கு குறைவான சிறுமிகள் எனவும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டில் இது போன்று 60 திருமணங்கள் மட்டுமே நடந்ததாகவும் தற்போது இது இரண்டு மடங்காக அதிகரித் துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, சுவிஸில் உள்ள ஈராக், சிரியா, எரித்திரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா நாடுகளை சேர்ந்தவர்களே இதுபோன்ற திருமணத்தை நடத்துவதும் தெரிய வந்துள்ளது.
இதன் உச்சக்கட்டமாக சோமாலியா நாட்டை சேர்ந்த 10 வயது சிறுமிக்கும் கட்டாயம் திருமணம் செய்யப் பட்டுள்ளது.
இது குறித்து இணையத்தள நிறுவனரான அனு சிவகனேசன் பேசிய போது, குறைந்த வயதில் கட்டாய திருமணம் நிகழ்வதற்கு காரணம் சுவிஸ் நாட்டிற்குள் வரும் அதிகளவிலான அகதிகள் மட்டும் இல்லை.
இந்த விவகாரத்தில் போதிய விழிப்புணர்வும், கடுமையான நடவடிக்கையும் இல்லாதது தான் காரணம் என தெரிவித் துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் சட்டப்பூர்வமான திருமண வயது 18 ஆகும்.
கடந்த 2012ம் ஆண்டு குறைந்த வயதில் கட்டாய திருமணம் செய்து வைப்பவர் களுக்கு 5 ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும் என பாராளுமன்றத்தில் அரசு வரையறை கொண்டு வந்தது குறிப்பிடத் தக்கது.