தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் பயன்படுத்த காரணங்கள் என்ன?

ரயில் தண்டவாளத்தில் கருங்கல் ஜல்லிகளைக் கொட்டி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஏன், இப்படிக் கருங்கல் ஜல்லிகளைக் கொட்டி யிருக்கிறார்கள் என்று என்றைக்காவது யோசித் திருக்கிறீர்களா?
தண்டவாளங்களில் ஜல்லி கற்கள்


தண்டவாளத்தில் செல்லும் ரயில் அதிக எடையுடன் இருக்கும். மேலும் அது வேகமாகவும் செல்லும். 

அப்போது அழுத்தம் அதிகம் இருப்பதால், தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு, தண்டவாளங்களில் ஜல்லிக் கற்கள் போடப் படுகின்றன.
பொதுவாக வெப்பத்தினாலும், நிலஅதிர்வு மற்றும் கடினமான வானிலையின் போதும் இரயில் தன்டவாளங்கள் சுருங்கவும் விரியவும் செய்யும். 

இதனால் தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே தண்டவாளங்களில் கற்கள் உள்ளன.

ரயில் தண்டவாளங்களில் இருக்கும் கூர்மையான கற்கள் மர விட்டங்கள் வழுக்கி சென்றுவிடாமல் தடுக்கும்.


ஜல்லிக் கற்களை மேல் எழுப்பி தண்டவாளங்கள் அமைக்கப் படுவதற்கு காரணம், நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருப்பதற்கு தான்.

களைகளின் வளர்ச்சி மற்றும் இதர தாவரங்களின் வளர்ச்சியினால் தண்டவாளங்களில் ரயில் செல்வதில் இடையூறு ஏற்படாமல் தடுக்கவே ஜல்லிக் கற்கள் போடப் பட்டுள்ளன.
இந்த 5 காரணங்களுக் காகவே ஜல்லி கற்கள் தண்டவாளத்தில் போடப்படுகின்றன.
Tags:
Privacy and cookie settings