ஜிஎஸ்டி மசோதா நாளை மாநிலங்கள் அவையில் தாக்கல் !

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி), மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி) 
ஜிஎஸ்டி மசோதா நாளை மாநிலங்கள் அவையில் தாக்கல் !
எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எனவே, இது தொடர்பாக எதிர் கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது. 

காங்கிரஸ் கட்சி சார்பில் 3 திருத்தங்களை கூறி, அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மசோதாவை ஆதரிப்போம் என்று உறுதியாக இருந்தது. 

இந்நிலையில், மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களுடனும் சில தினங்களுக்கு முன்பு ஜெட்லி ஆலோசனை நடத்தினார்.

ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு ஏற்கும் என்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பின் காரணமாக 5 ஆண்டுகளாக மத்திய அரசு மாற்றியது.

பொருட்களை உற்பத்தி செய்யும் மாநில அரசுகள் கூடுதலாக ஒரு சதவீத வரி விதிக்கும் பிரிவும் நீக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான இவை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, 

இந்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி என்பது அடிப்படை வரிவிதிப்பு முறையில் செய்யப்படும் மாற்றம் என்பதால், 
இது அரசியல் சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட வேண்டும். அரசியல் சட்டத்திருத்தம் என்பதால் மூன்றில் 2 பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும்.

எனவே, மாநிலங்களவையில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த மசோதாவை ஆதரித்தால் மட்டுமே இந்த மசோதா நிறைவேறும் என்ற சூழ்நிலை உள்ளது. 

எனினும், காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகள் இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவளிக்கும் என மத்திய அரசு நம்புகிறது. இந்நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

இதையொட்டி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி கட்சியினருடன் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று மீண்டும் ஆலோசித்தார்.
Tags:
Privacy and cookie settings