சவூதியில் சிக்கிய உத்தர பிரதேச தொழிலாளர்களுக்கு உதவி எண் !

சவூதி அரேபியா நாட்டில் கடுமையான நிதி நெருக்கடியினால் சிக்கி தவிக்கும் உத்தர பிரதேசத்தினை சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்காக மாநில அரசு உதவி எண்களை தொடங்கியுள்ளது.
சவூதியில் சிக்கிய உத்தர பிரதேச தொழிலாளர்களுக்கு உதவி எண் !
சவூதி அரேபியா நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையினால் வெளிநாட்டில் இருந்து சென்று தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளனர். அவர்களில் இந்திய நாட்டினரும் அடங்குவர்.

இந்நிலையில், அவர்களுக்கு உதவுவதற்காகவும் மற்றும் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்காகவும் உதவி எண் அமைக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவினை உத்தர பிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் பிறப்பித்துள்ளார். அதற்காக அமைக்கப்பட்ட +91-8005140000 என்ற உதவி எண் நாள் முழுவதும் செயல்படும்.

இந்த உதவி எண் வழியே அறிந்து கொண்ட பிரச்னைகளை மாநில அரசானது மத்திய அரசின் ஒத்துழைப்புடன் உரியவர்களுக்கு தெரிவிக்கும் என தகவல் தெரிவிக்கின்றது. 
சவூதி அரேபியாவில் தங்களது பணிகளை இழந்து கடுமையான நிதி நெருக்கடியினால்

உணவு கூட வாங்க முடியாத நிலையில் சிக்கி தவிக்கும் அதிக அளவிலான இந்திய பணியாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி அழைத்து வரப்படுவர் என வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று கூறினார்.

அந்நாட்டில் பொருளாதார மந்தநிலையினால் இதுவரை 10 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
Privacy and cookie settings