ஆசிய மகளிர் பாட்மிண்டன் கோட்டையைத் தகர்த்து ஐரோப்பாவுக்காக முதல் தங்கத்தை பாட்மிண்டனில் வென்ற ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மாரின்.
வெள்ளி மங்கை பி.வி.சிந்து கடைபிடித்த ஒரு உத்தி குறித்து கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் செட்டில் கடைசி 5 புள்ளிகளை தொடர்ச்சியாக வென்ற சிந்து செட்டைக் கைப்பற்றி அதிர்ச்சியளித்தார்,
ஆனால் ‘பாட்மிண்டனின் ரஃபேல் நடால்’ என்று அழைக்கப்படும் கரோலினா மாரின் கடைசி 2 செட்களில் 2-வது செட்டை சவுகரியமாக வென்றார் 3-வது செட்டில் போராடியே வென்றார்.
இந்நிலையில் தனது வெற்றி குறித்து கூறும் போது, ஆசிய உலகை உடைத்த ஒரு சிறு ஸ்பானிய நாட்டுக்காரி நான்.
எனது கனவு உண்மையானது. என்பின்னால் மிகச்சிறந்த அணி இருந்தது. இவர்கள் எனக்கு மிகவும் உதவினர்.
ஆட்டத்தின் சூட்சுமம் என்னவெனில் இறகுப் பந்தை புதிதாக எடுத்து ஆடவேண்டும் அப்போதுதான் வேகம் கிடைக்கும். ஆனால் சிந்து பழைய இறகுப்பந்தில் ஆட முடிவெடுத்தார்.
அவர் இறகுப் பந்தை சில வேளைகளில் மாற்றாமலேயே ஆடினார், காரணம் அது மெதுவாக வரும் ஷாட் அடித்தாலும் வேகம் இருக்காது.
எனது கவனத்தை இழக்கச் செய்ய சிந்து இந்த உத்தியைக் கடைபிடித்தார். ஆனால் இப்படி நடக்கும் என்பதை நான் அறிவேன். அது எனக்கு பெரிய அளவில் எரிச்சலை ஏற்படுத்தவில்லை.
நான் தயாராகவே இருந்தேன். இவையெல்லாம் அவரவர்கள் கடைபிடிக்கும் தனிப்பட்ட உத்தி, ஆட்டத்தின் ஒரு பகுதியே இவ்வாறு கூறினார் மாரின்.