உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும் மற்றும் இரத்த சோகை ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே இரும்புச்சத்து ஒருவரது உடலில் அளவுக்கு அதிகமானால்,
கல்லீரல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரையிலான அபாயங்களை சந்திக்கக் கூடும் என்பது தெரியுமா?
எனவே ஒவ்வொருவரும் ஃபிட்டாகவும், ஆரோக்கி யமாகவும் இருக்க அன்றாடம் சரியான அளவில் மட்டும் இரும்புச்சத்தை எடுக்க வேண்டும்.
ஒருவருக்கு ஒரு நாளில் 21 மிகி இரும்புச்சத்து அவசியம். சரி, இப்போது ஒருவரது உடலில் இரும்புச் சத்து அதிகமாக இருந்தால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போம்.
உடலில் இரும்புச்சத்து அளவுக்கு அதிகமாக இருந்தால், அதன் காரணமாக திசுக்கள் மிகுந்த பாதிப்பிற் குள்ளாகும். இதனால் இதயம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் போன்ற வற்றால் அவஸ்தைப் படக்கூடும்.
அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து கல்லீரலில் உள்ள திசுக்களை பாதித்து, கல்லீரலில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். சில சமயங்களில் அதிகப் படியான இரும்புச்சத்து, கல்லீரல் புற்றுநோயை கூட உண்டாக்கும்.
அதிகமான இரும்புச்சத்து மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால், வளர்சிதை மாற்ற நோய்களுக்கு வழிவகுக்கும். அதிலும் குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிகப் படியான இரும்புச்சத்து, எலும்பு உருவாக்கம் மற்றும் கால்சியம் உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தி, எலும்பு முறிவு, எலும்புகளின் அடர்த்தி குறைவு மற்றும் ஆஸ்டியோ போரோசிஸை உண்டாக்கும்.
பர்கின்சன் நோய் என்பது ஒரு மூளை சம்பந்தப்பட்ட ஓர் நோய். அதிகப்படியான இரும்புச்சத்து பர்கின்சன் நோயை உண்டாக்கும் என்பது தெரியுமா? பொதுவாக மூளையின் வளர்ச்சிக்கு இரும்புச்சத்து இன்றியமை யாதது தான்.
ஆனால் அச்சத்து அதிகமானால், நியூரான்கள் பலவீனமாகி, அதனால் நரம்பு மண்டலம் சேதமாகி, பர்கின்சன் என்னும் ஒரு வகையான ஞாபக மறதி நோயை உண்டாக்கும்.
இரும்புச்சத்து ஒருவரது உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதனால் புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக உள்ளது.
ஏனெனில் இரும்புச்சத்து அதிகரிக்கும் போது, அனைத்து இரத்தமும் சுத்திகரிப் படாமல், உடலில் நச்சுக்கள் நிறைந்த இரத்த ஓட்டத்தால், புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கும்.