அமெரிக்காவில் ஒரு கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 வருடமாக தலை மறைவாக இருக்கிறார் ஒரு நபர். அவர் தற்போது பெண்ணாக மாறி வாழ்ந்து வரலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.
அவரைப் பிடிக்க தீவிர வேட்டையும் தொடர்கிறதாம். அந்த நபரின் பெயர் ஜான் கெல்லி.
இவர் 1983ம் ஆண்டு பார்பரா கெர்பர் மற்றும் வில்லியம் வெய்த் ஆகிய இருவரைக் கொலை செய்து விட்டுத் தலை மறைவானார்.
இதன் பிறகு இவரைப் பிடிக்கவே முடியவில்லை. தற்போது வரை அவர் தலை மறைவாக இருக்கிறார்.
அப்போது கெல்லிக்கு 30 வயது இருக்கும். மிச்சிகனைச் சேர்ந்தவர். பார்பரா இவரது காதலி தான். தனது வீட்டில் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரது உடல் கடூரமாக வெட்டித் தள்ளப் பட்டிருந்தது.சில நாட்கள் கழித்து ஓஹையோவைச் சேர்ந்த வில்லியமின் உடலை போலீஸார் மீட்டனர்.
இவருக்கும், பார்பராவுக்கும் தொடர்பு இருப்பதை பின்னர் போலீஸார் கண்டு பிடித்Lனர். அதன் பிறகு கெல்லி தலை மறைவாகவே இருந்து வருகிறார்.
அவரைப் பிடிக்க நடந்த அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இந்த நிலையில் கெல்லி ஒரு பெண்ணாக மாறியி ருக்கலாம் என்று போலீஸாருக்குச் சந்தேகம் வந்துள்ளது.
அவர் கலிபோர்னி யாவில் வசிக்கலாம் என்றும் முழுமையான பெண் போல தன்னை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்றும் போலீஸாருக்குச் சந்தேகம் வந்துள்ளது.
அதேசமயம், அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் போலீஸில் ஒரு பிரிவு சந்தேகிக்கிறது. அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று இவர்கள் உறுதியாக சொல்கின்றனர்.