நம் கிச்சனில் இருக்கும் மளிகைப் பொருட்களில், 50 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் சேர்ந்த பொருட்களே! கலப்படத்தை எப்படிக் கண்டறிவது என்று தெரியாததால், அந்தப் பொருட்களைப் பயன்படுத்தப் பழகி விட்டோம்.
ஆனால், மளிகைப் பொருட்களின் கலப்படத்தை சில எளிய வழிகள் மூலம் அறியலாம்
மிளகு கலப்படம்:
மிளகில் எடை அதிகரிப்புக்காக பப்பாளி விதை சேர்க்கப் படுகிறது. பழைய ஸ்டாக் மிளகைப் பளபளப்பாக்கி ஃப்ரெஷ் ஷாகக் காட்ட, இப்போது மினரல் ஆயிலும் கலக்கப் படுகிறது.
கண்டறிதல்:
டிஷ்யூ பேப்பரில் மிளகை வைத்தால், பேப்பரில் எண்ணெய் ஒட்டும். தண்ணீரில் மிளகைப் போட்டால் எண்ணெய் மிதக்கும். மிளகில் உள்ள எண்ணெய் வாசனையை வைத்தும், கலப்படத்தைக் கண்டுபிடிக்கலாம்.