லைட் புதுசு.. வண்டி பழசு..இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரோந்து வாகனங்கள் அனைத்துமே பழைய வாகனங்கள் ஆகும்.
ஏற்கனவே ஓடி கண்டம் செய்யப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களும் ரோந்து பணிக்கு வந்துள்ளன. இவற்றில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகள் மட்டுமே புதுசு ஆகும்.
ஆனால் வண்டி பழசு தான். இதனால் அவசர தேவைக்கு வண்டியை எடுக்கும் போது அவை ஸ்டார்ட் ஆவதில்லை. இது போன்ற பிரச்சினையாலும் போலீசார் சிரமப் படுகிறார்கள்.
குமரியில் விபத்துக்கள் மற்றும் திருட்டுக்களை தடுக்கும் வகையில் ஸ்டார்மிங் ஆபரேஷன் என்ற பெயரில் அடிக்கடி சோதனை நடத்தி
ஒரு நாளைக்கு 800, 900 வழக்குகள் வரை போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வருபவர்கள்,
குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
போலீஸ் வாகன சோதனைகள் மேற்கொண்டாலும் கூட நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 40 பேராவது குடிபோதையில் சிக்குகிறார்கள்.
இவர்களில் பைக் ஓட்டுபவர்கள், ஆட்டோ டிரைவர்கள், டெம்போ டிரைவர்கள் உண்டு. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதிகளவில் சிக்கி உள்ளனர்.
கடந்த 7 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கியவர்கள் எண்ணிக்கை மட்டும் 8000 த்தை தாண்டி உள்ளது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு சிக்கியவர்களில் லைசென்சு இல்லாமல், ஹெல்மெட் இல்லாமல், உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்களும் உண்டு.
குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் தான் அதிகம் பேர் சிக்கி உள்ளனர்.
பகல் வேளையிலும் கூட அதிகமாக குடித்து விட்டு சிக்கியவர்களும் உண்டு. இரவு நேர சோதனையிலும் ஏராளமானவர்கள் சிக்கி உள்ளனர்.
இவ்வாறு குடிபோதையில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது இதே போல் பள்ளி மாணவர்களும் குடிபோதையில் சிக்கி உள்ளனர்.
வீக் என்ட் பெயரில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் சோதனைகளில் பள்ளி மாணவர்கள் கூட சிக்குவது உண்டு என்றும்,
கார்களில் சோதனை நடத்தும் போது பிரபல குடும்பங்களை சேர்ந்த பெண்கள் கூட குடிபோதையில் கார் ஓட்டி வருவதும் உண்டு என்றும் போலீசார் கூறினர்.
எனவே குடிப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க, டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலர்ஃபுல் சில்லி பரோட்டா செய்வது எப்படி?
இந்த நிலையில் தற்போது எல்.இ.டி. விளக்குகளுடன் கூடிய ரோந்து வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
4 சக்கர வாகனங்கள் 15ம், இரு சக்கர வாகனங்கள் (பைக்) 33லிலும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தி சோதனை நடக்கிறது. இவர்களுக்கு என தனித்தனி பாயிண்ட் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ரோந்து வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு 20 லிட்டர் முதல் 30 லிட்டர் வரை டீசல் வழங்கப்படுகிறது. இவர்கள் தொடர்ந்து ரோந்து பணிகளில் இருக்க வேண்டும்.
சுழற்சி முறையில் இங்கு காவல் துறைக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரி இயங்கும் வேளைகளில் அந்த பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
குற்ற இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் இவர்கள் செயல்பட வேண்டும் என்பன போன்ற உத்தரவுகள் வந்துள்ளன.
ஆனால் இவற்றில் சில வாகனங்கள் மட்டுமே அவ்வப்போது நகருக்குள் உலா வருவதை காண முடிகிறது. பெரும்பாலான ரோந்து வாகனங்கள் ரோட்டோரமாக முடங்கி நிற்பதையே வாடிக்கையாக வைத்து உள்ளன.
இதன் காரணமாக முக்கிய நேரங்களில் நகருக்குள் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்கு கூட ஆள் இல்லை.
பிரச்சினை என்றால் ரோந்து வாகனங்களில் போலீசார் வருவதற்கு முன், காவல் நிலைய போலீசார் வருகிறார்கள். அந்தளவுக்கு ரோந்து வாகனங்களில் செயல்பாடுகள் உள்ளன.
இவற்றை செம்மைப்படுத்தும் பணிகளை எஸ்.பி. தர்மராஜன் மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அனைத்து ரோந்து வாகனங்களுக்கும் மொபைல் எண்களை அறிவிக்க வேண்டும்.
பிரச்சினைக்குரிய இடங்களுக்கு விரைந்து செல்ல அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் அந்தந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, அவை எந்த பகுதிகளில் நிற்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் என்ன? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.