'மின்னல் மனிதர்' என்று செல்லமாக அழைக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், தான் படித்த பள்ளிக்கு ரூ. 6 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார்.
ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் 100 மற்றும் 200 ஓட்ட பந்தயங்களில் அசத்தி வருபவர். அண்மையில் பெய்ஜிங் நகரில் நடந்த உலகத் தடகளத்திலும் உசேன் போல்ட் இந்த இரு பிரிவிலும் தங்கம் வென்று அசததினார்.
ஐமைக்காவில் உள்ள ட்ரெலானி என்ற சிறிய நகரத்தில் பிறந்த உசேன் போல்ட் , அங்குள்ள வில்லியம் நிப் என்ற பள்ளியில் படித்தார். இந்த பள்ளிதான் உசேன் போல்ட் சிறந்த தடகள வீரராக உருவாக அடித்தளமிட்டது.
தற்போது தடகள உலகின் மன்னனாக திகழும் உசேன் போல்ட், தான் படித்த இந்த பள்ளிக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு ஈடான பல்வேறு விளையாட்டு கருவிகள்,உபகரணங்களை வழங்கியுள்ளார்.
இது மட்டுமல்ல அறக்கட்டளை வழியாகவும் தான் பிறந்த மண்ணுக்கு பல்வேறு உதவிகளை உசேன் போல்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.