மெக்ஸிகோவில் பாலியல் தொழில் செய்து வந்த பெண்கள் தற்போது நிம்மதியாக வாழ்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
மெக்ஸிகோ நாட்டில் ஒரு காலத்தில் பாலியல் தொழிலில் கொடி கட்டி பறந்த பெண்களுக்கு தற்போது வயதாகி விட்டதால், அவர்களால் தங்கள் வாழ்க்கையினை மேற்கொண்டு தொடர முடியவில்லை.
இதனால் அந்நாட்டு அரசாங்கம், ஓய்வு மையம் உதவி என்ற அமைப்பினை ஆரம்பித்து, அதில் வயதான பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
இந்த உதவி மையத்தில் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் வழங்கப் படுகிறது.
அது மட்டுமின்றி இவர்கள் தங்களது கடந்த கால வாழ்க்கையின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காக ஆலோசனைகளும் வழங்கப் படுகின்றன.
வயதான பாலியல் தொழிலாளிகள் எப்படி இருக்கிறார்கள்?
ஆலோசனைகள்
இப்பெண்கள் தாங்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்ட காலத்தில் கடும் நெருக்கடிகளை சந்தித்திருக்க கூடும்,
எனவே இவர்கள் நிகழ்காலத் தினை எவ்வித நெருக்கடியும் இன்றி வாழ்வதற்கு மனித உரிமை அமைப்பின் உதவியோடு, கருத்தரங்கு ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன.
கடந்த கால நினைவில்
Elia என்ற பெண் தனது அறையில் இரண்டு பொம்மைகளை வைத்துக் கொண்டு அதனை தூங்க வைப்பதும், அதனிடம் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி எடுத்து கூறுகிறார்.
இவரது கடந்த வாழ்க்கை கரடு முரடாய் இருந்தாலும், தற்போது அவர் நல்ல சூழ்நிலையில், ஆதரவுடன் வசித்து வருகிறார்.
ஆன்மீகம்
இந்த உதவி மையத்தில் வாரம் ஒரு முறை இவர்களுக்காக வழிபாடு நடக்கிறது, இதில் கலந்து கொள்ளும் இவர்களுக்கு உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியில் நல்ல ஒரு வழிகாட்டுதல் கிடைக்கிறது.
அலங்கார பெண்கள்
இவர்களுக்கு வயதாகி விட்டாலும், கடந்த காலத்தில் வாடிக்கை யாளர்களை கவர்வதற்காக தங்களை அழகு படுத்திக் கொண்ட பழக்கத்தை. தற்போது சில பெண்கள் தொடர்கின்றனர்.
தலைக்கு சாயம் பூசிக்கொள்வது, கைகளுக்கு பாலிஷ் போடுவது என அலங்காரம் செய்வதில் கவனம் செலுத்திக் கொள்கின்றனர்.