நெஸ்லே இந்தியாவின் மாகி நூடுல்ஸ் !

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான மாகி நூடுல்ஸுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப் பட்டதால் விற்பனை வெகுவாக பாதிக்கப் பட்டிருந்தது. 
நெஸ்லே இந்தியாவின் மாகி நூடுல்ஸ் !

ஆனால் இந்த வருடம் ஜுன் மாதம் வரை மொத்த நூடுல்ஸ் விற்பனையில் 57 சதவீதம் சந்தையை மாகி நூடுல்ஸ் பிடித்துள்ளது. 

கடந்த ஒன்பது மாதங்களுக்குள் உடனடி நூடுல்ஸ் பிரிவில் 57.1 சதவீத சந்தையை மாகி நூடுல்ஸ் பிடித்துள்ளது. 

ஐந்து மாத தடைக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெஸ்லே நிறுவனம் மாகி நூடுல்ஸை மீண்டும் அறிமுகப் படுத்தியது. அந்த மாதமே 10.9 சதவீத சந்தையை மாகி நூடுல்ஸ் பிடித்தது.

அடுத்தபடியாக டிசம்பர் மாதம் மாகி நூடுல்ஸ் விற்பனை உயர்ந்து மொத்த சந்தையில் 35.2 சந்தையை பிடித்தது. கடந்த மார்ச் மாதம் மாகி நூடுல்ஸ் சந்தை 51 சதவீதமாக உயர்ந்தது. 
 
நெஸ்லே நிறுவனம் நான்கு வகைகளில் மாகி நூடுல்ஸை மீண்டும் அறிமுகம் செய்தது. 

மாகி கப்பா, மாகி ஹோத்ட்ஸ் என வெவ்வேறு வகைகளிலும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாத (No onion No garlic) எனும் வாசங்களுடன் புதிய வகையிலும் மாகி நூடுல்ஸை அறிமுகம் செய்தது.

இந்தியாவில் மீண்டும் மொத்த உடனடி நூடுல்ஸ் விற்பனை சந்தையில் மாகி நூடுல்ஸ் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 57 சதவீத சந்தையை பிடித்துள்ளது.

மீண்டும் வெவ்வேறு வகைகளில் மாகி நூடுல்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு விற்பனையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது என்று கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி நெஸ்லே நிறுவனம் தெரிவித்தது.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் படி எப்எஸ்எஸ்ஏஐ இந்தியாவில் மாகி நூடுல்ஸ்க்கு தடை விதித்தது. 

மாகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட முக்கிய மூலப் பொருட்கள் அதிகமாக இருப்பதால் மாகி நூடுல்ஸை உட்கொள்வது பாதுகாப்பற்றது மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று கூறி தடை விதிக்கப்பட்டது.

ஐந்து மாத தடைக்குப் பிறகு நெஸ்லே நிறுவனம் மாகி நூடுல்ஸை இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings