மருந்து கடைகளில் இனி நம்மை யாரும் ஏமாற்ற முடியாது !

மருந்து கடைகளில், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக விற்கப்படுவதை தடுக்க புதிய விதிமுறை பின்பற்ற போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மருந்து கடைகளில் இனி நம்மை யாரும் ஏமாற்ற முடியாது !
பொதுவாக மருந்து கடைகளில் வாங்கப்படும் மாத்திரைகளுக்கு உரிய ரசிது வழங்குவ தில்லை. 

இதன் காரணமாக சில்லரை விற்பனையை விட கூடுதலாக விற்கப்படுவதாக அவ்வப்போது மத்திய அரசுக்கு தகவல்கள் சென்ற வண்ணம் உள்ளன.

இதை தடுக்க மருந்துகளில் பார்கோடு முறை பின்பற்ற போவதாகவும், அதன் மூலம் மருந்து கடைக்காரர்கள் மருந்தில் உள்ள சில்லரை விலையை விட அதிகமாக கூறி விற்பனை செய்ய முடியாது.

மேலும் இதில் மருத்துவ நிறுவனங்கள் நிர்ணயித்திருக்கும் சில்லறை விலை, மருத்துவ கட்டுபாட்டு கழகத்தின் கணிணி சர்வரில் 

இணைக்கப் பட்டிருக்கும் என்பதால் விலை மாற்றத்தில் ஏதேனும் மாற்றம் செய்தால் அவர்களுக்கு தகவல் சென்று விடும்.

இதனால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் பொது மக்கள் ஏமாற்றப் படுவது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு சில்லரை விற்பனையாளர்கள் பார்கோடு இருந்தால், அதற்கு கண்டிப்பாக பார்கோடு ரீடர் சாதனம் இருந்தால் மட்டுமே அதை விற்க முடியும்.

எங்கள் போன்ற சில்லரை வியபாரிகள் என்ன செய்வது, சில நேரங்களில் மின்சாரம் கூட தடைபடும் நிலை உள்ளது என இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கணினி வல்லுனர் கூறியதாவது: தற்போது தான் ஸ்மார்ட் போன் வந்து விட்டதே, அதில் க்யூ ஆர்கோடு ரீடர் என்ற அப்ளிகேசனை பயன்படுத்தி பார்கோடை ஸ்கேன் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings