சார் என்ன வேணும்.. ஒபாமாவின் சின்னப் பொண்ணு !

விடுமுறைக் காலங்களை பயனுள்ள முறையில் செலவிடும் வகையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இளைய மகள் கடல் உணவு விற்கப்படும் பிரபல உணவகம் ஒன்றில் சர்வராக வேலைக்கு சேர்ந்துள்ளார். 
சார் என்ன வேணும்.. ஒபாமாவின் சின்னப் பொண்ணு !
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இரண்டு மகள்கள். அவர்களில் இளையவர் 15 வயதான சாஷா என்கிற நடாஷா. சமீபத்தில் இவருக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து தனது மகளை கடல் உணவுகளை விற்பனை செய்யும் உணவகம் ஒன்றில் பணியில் சேர்த்து விட்டார் ஒபாமா. இது அவர்களது உறவினரின் கடைதான்.

ஆனபோதும் மற்ற ஊழியர்களைப் போலவே, தானும் சீருடை அணிந்து வாடிக்கை யாளர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவது, 

அவர்கள் சாப்பிட்டுச் சென்றதும் மேஜையைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை நடாஷா செய்து வருகிறார்.

அதோடு, பில் போடுவது மற்றும் காரில் இருந்து கொண்டு உணவுப் பொருட்களைக் கேட்பவர்களுக்கு கொண்டு சென்று பரிமாறுவது போன்ற பணிகளையும் அவர் செய்கிறார். 
சார் என்ன வேணும்.. ஒபாமாவின் சின்னப் பொண்ணு !
அமெரிக்காவின் முதல் மகளான நடாஷா தினமும் இங்கு நான்கு மணி நேரம் வேலை பார்த்து வருகிறார்.

இருப்பினும், அதிபரின் மகள் என்பதால் ஆறு காவல் அதிகாரிகள் நடாஷாவின் பாதுகாப்பைக் கண்காணித்து, வேலை முடிந்ததும் அவரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதிபரின் மகளாக இருந்தாலும், தனது மகள் சாதாரண வாழ்க்கையின் அனுபவங்களைப் பெற வேண்டும் என்று 

பெற்றோர்களாக தாங்கள் விரும்புவதாக ஒபாமாவின் மனைவியும், நடாஷாவின் தாயுமான மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings