கோவையில் நடைபெற்ற ‘பாரா சைலிங்’ எனப்படும் பாரா கிளைடர் மூலமாக ஆகாயத்தில் பறக்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட விபத்தில், கீழே விழுந்து தொழிலதிபர் நேற்று உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவ கல்லூரியின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு இந்தியன் ஏரோ மற்றும் அறிவியல் மன்றத்துடன் இணைந்து
பாராசைலிங் என்ற பெயரில் பாரா கிளைடர் உதவியுடன் ஆகாயத்தில் பறக்கும் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.
இதில், 12 வயது முதல் 60 வயது வரையிலானவர் கள் ரூ.500 கட்டணம் செலுத்தி 150 முதல் 200 மீட்டர் உயரத்துக் குள் 20 நிமிடங்கள் வரை பாரா கிளைடர் மூலமாக ஆகாயத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டனர்.
கோவை பீளமேடை சேர்ந்த வார்ப்பட ஆலைகளுக்கு இயந்திர உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் மல்லேஸ் வர்ராவ் (53)
நேற்று பகல் பாரா கிளைடரை கட்டிக்கொண்டு சுமார் 60 அடி உயரத்துக்கு மேலே சென்றார்.
சுமார் ஒரு நிமிட அள வில் அந்தரத்தில் பாராகிளைடர் மூலமாக நின்று கொண்டிருந்த அவர், திடீரென அதிலிருந்து விடுபட்டு கீழே விழுந்தார்.
இதில், அவரது தலை, இடுப்பு, கால், கை, கழுத்து, முதுகுத் தண்டுவடம் என உடலின் பல்வேறு இடங்களிலும் அடிபட்டது.
சுய நினைவு இழந்த அவரை உடனடி யாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்ட தாகத் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக 304(ஏ) - அஜாக்கி ரதை மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உரிய பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்ப டுத் தாததால் இடுப்புப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பெல்ட் அறுந்து விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மறுப்பு
இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எட்வின் ஜோ கூறும் போது, அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் 3 நாட்கள் நிகழ்ச்சி நடத்துவதாக திட்டமிடப்பட்டது.
இருப்பினும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் 2 நாட்களில் (ஆக. 6) முடித்து கொண்டோம். 3-வது நாளாக நடந்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை.
சம்பந் தப்பட்ட தனியார் நிறுவனம் தான் தன்னிச்சையாக நடத்தியது என்றார்.
இது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் கிளைடர் பாபு என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் முயற்சியில் விபத்து
‘மல்லேஸ்வர் ராவ், பாரா கிளைடர் உபகரணத்தை உடலில் கட்டி கொண்டு பறப்பதற்குத் தயாராகியுள்ளார். அப்போது, பாரா கிளைடரை காற்று வேகமாக இழுத்துச் சென்றுள்ளது.
தொடர்ந்து, அந்த பாராகிளைடர் பக்கவாட்டில் சென்று அங்கு நிறுத்தியிருந்த வாகனங்களின் மீது கீழே விழுந்தது. இதில், எவ்வித அடியும் படாமல் மல்லேஸ்வர் ராவ் தப்பியுள்ளார்.
இருப்பினும், ஆகாயத்தில் பறப்பதற்கு அவர் ஆர்வம் காட்டவே, 2-வது முயற்சியின் போது உயரத்துக்குச் சென்று விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
மல்லேஸ்வர் ராவுக்கு, பத்மா என்ற மனைவியும், மானஷா என்ற மகளும், சூர்ய தேஜா என்ற மகனும் உள்ளனர் . மானஷா, ஹைதராபாத் திலும் சூர்யதேஜா, பெங்களூருவி லும் பணிபுரிகின்றனர்.