நம்மில் பலருக்கு நகரும் பேருந்தை நிறுத்த சொல்லி ஓடிவந்து ஏறிய அனுபவம் கட்டாயம் நினைவில் இருக்கும் ஆனால் அதுவே இன்று பைக்கில் பறக்கும் இளைய சமுதாயத்திற்கு மிக அரிதாகவே
இத்தகைய அனுபவம் கிடைத்திருக்கும் ஆனால் விமானத்தையே நிறுத்தச் சொல்லி ரன்வேயில் ஒடிய முதலும் கடைசியுமான நபர் இந்த பொலிவியா நாட்டு பயணியை தவிர வேறிருக்க முடியாது.
விடுமுறையில் ஸ்பெயினுக்கு பொழுதைக் கழிக்கச் சென்ற இந்த பொலிவியர் மாட்ரிட் விமான நிலையத்தில் போர்டிங் பாஸூடன் காத்திருந்தார்
ஆனால் விமானத்தில் ஏறுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் கவனிக்கத் தவறி விட்டார் ஒரு வேளை மொழிப் பிரச்சனையாக இருக்கலாம்.
ஜெட் பிரிட்ஜ் / போர்டிங் பிரிட்ஜ் எனப்படும் இணைப்புப் பாதையிலிருந்து ரியான் ஏர் விமானம் விலகி ரன்வேயை (Tarmac) நோக்கி மெதுவாக சென்று கொண்டிருக்கையில் பொலிவியருக்கு திடீர் ஞானோதயம் பிறக்க ஆகா!
நம்மை விட்டுவிட்டு விமானம் பறக்கப் போகிறதே என்ற அங்கலாய்ப்பில் அனைத்து பாதுகாப்பு அரண்களையும்
எப்படியோ மீறி சுமார் 10 அடி உயர பாலத்திலிருந்தும் குதித்து விமானத்தை நோக்கி ஒடினார், கையில் 2 பேக்குகள் வேறு.
உஷாரான ஏர்போர்ட் அதிகாரிகள் அவரையும் பிடித்து, விமானத்தையும் நிறுத்தி ஒருவழியாக வழக்கும் பதிந்து கொண்டு அதே விமானத்திலேயே அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவருடைய இந்த வரம்பு மீறிய செயலுக்காக மிகப்பெரிய அபராதம் காத்திருக்கிறதாம்,