ஒலிம்பிக் போட்டிகளில் சுவராஸ்யமான பல சம்பவங்கள் நடை பெறுவதுண்டு. விபத்துகளில் சிக்கி பலரும் பதக்க வாய்ப்பை இழந்துள்ளனர்.
உயரம் தாண்டும் போட்டியில் பங்கு பெற்ற ஜப்பான் வீரரின் பதக்கக் கனவு அவரது ஆணுறுப்பினால் பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பல வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்று வருகின்றனர். இந்த போட்டிகள் தொலைக் காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகின்றன.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றும் தீவிரமான பயிற்சி ஈடுபட்டு போட்டியிலும் பங்கேற்று வருகின்றனர். ஜப்பானை சேர்ந்த ஹிரோகி ஒஜிடா எனும் வீரர் போல் வால்ட் எனப்படும்
தடியூன்றித் தாண்டும் போட்டியில் பங்கேற்ற போது மிகப்பெரிய சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தடியூன்றி உயரம் தாண்டும் போது மேலே வைக்கப் பட்டுள்ள கம்பியில் உடல் படாமல் தாண்ட வேண்டும் என்பது போட்டியின் விதி.
ஆனால் ஜப்பான் வீரரின் உடல் கம்பியில் படாமல் தாண்டிய போது அவரது ஆணுறுப்பு பகுதி கம்பியில் பட்டது.
இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். அணுறுப்பு அடிபட்டதில் அந்த வீரர் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டார் என்பது அவரது முகமே உணர்த்தியது.
இந்த போட்டியை நேரடியாக டிவியில் கண்ட ரசிகர்களும் உணர்ந்தனர். சில வீரர்கள் விபத்தில் சிக்கி நூலிழையில் பதக்கத்தை தவற விடுகின்றனர். ஜப்பான் வீரரின் பதக்கக் கனவு அவரது ஆணுறுப்பு மூலம் பறிபோயுள்ளது.
Tags: