மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிடம் கிட்னி திருட்டு !

1 minute read
உத்தரப் பிரதேசத்தில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த பெண்ணிடம் இருந்து கிட்னி திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது.
மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிடம் கிட்னி திருட்டு !
உத்தரப் பிரதேச மாநிலம் பெய்ரேலி நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் குழந்தை பேறுக்காக கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

15 நாட்களாக மருத்துவ மனையில் தங்கியிருந்த அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால், அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மூன்று வெவ்வேறு மருத்துவ மனைகளில் சோதனை செய்துள்ளார்.

சோதனையில் பெண்ணின் உடலில் இருந்து கிட்னி திருடப் பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை முன்பு பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 
தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், கிட்னி திருட்டின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப் பட்டவர் தெரிவித்தார்.
Tags:
Today | 25, March 2025
Privacy and cookie settings