இதற்கெல்லாமா விவாகரத்து தருமபுரி பேராசிரியர் !

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் ஒருவர், கல்லூரியின் முதல்வராக வேண்டும் என்பதற்காக நிர்வாண பூஜையில் ஈடுபட்டதோடு,
இதற்கெல்லாமா விவாகரத்து தருமபுரி பேராசிரியர் !
தனது மனைவியையும் பூஜைக்கு கட்டாயப் படுத்திய விவகாரம் பூதாகரமாகி யிருக்கிறது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் உடற்கூறு பேராசிரியராக இருக்கும் அவருக்கு,

மருத்துவக் கல்லூரி முதல்வராக வேண்டும் என்பது நீண்டநாள் கனவாம். அந்த பேராசிரியரின் முதல் மனைவி இறந்து விட, சேலம் மாவட்டத்தை அடுத்துள்ள 

காடையாம் பட்டியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்துள்ளார். அந்த பெண் சொல்லும் புகாரும், வெளியிட்டுள்ள புகைப்படமும் தான் இப்போது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அந்த பெண், எனது கணவர் மருத்துவக் கல்லூரியில் முதல்வராக வேண்டும் என்று செய்த அட்டூழியங்களை என்னால் தாங்க முடியவில்லை.
வீட்டில் திடீரென நிர்வாணமாக உட்கார்ந்து கொண்டு பூஜை செய்ய ஆரம்பித்து விடுவார். 

அது மட்டுமல்லாது, என்னையும் நிர்வாண பூஜைக்கு அழைத்தது தான் கொடுமையிலும் கொடுமை. நான் முடியாது என்று மறுத்து விட்டேன். 

அதனால் என்னை அடித்து துன்புறுத்தினார். அந்த கோபத்தில் என் அம்மா வீட்டுக்கு கிளம்பி போய் விட்டேன். சரியாகி விடுவார் என்று பார்த்தால் எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டார். 

என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரிடம் சென்று கேட்டதற்கு நீ என்னுடன் வாழ வேண்டுமென்றால் நிர்வாண பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று மறுபடியும் அடித்து துன்புறுத்தினார்.

அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன் என்றவர், அந்த பேராசிரியர் நிர்வாண பூஜையில் ஈடுபட்ட புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அந்த பெண் சொன்ன பேராசிரியரை தேடி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்றோம், 

இங்கு உள்ளவர்கள் யாரும் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று கூறி, அந்த பேராசிரியரை கண்ணில் காட்டாமல் மறைக்கிறார்கள். அந்த பெண் போலீசில் புகார் அளித்த பின் பல உண்மைகள் வெளிவரும்!
Tags:
Privacy and cookie settings