பெண்களுக்கு சம உரிமை அவசியம்.. ரஜினி | Rajni equality for women is necessary !

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும் என்று ஐஸ்வர்யா தனுஷுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் ரஜினி குறிப்பிட்டு இருக்கிறார். 
பெண்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப் பட்டுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

பெண்களுக்கான சம உரிமை மற்றும் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்து கூறவிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். 

ஆண் - பெண் இருபாலருக்கும் சமமான உலகை 2030 க்குள் உருவாக்குவது தான் இதன் நோக்கமாகும். இதற்கு ' planet 50 - 50' என பெயர் சூட்டப் பட்டுள்ளது.

"பொது மற்றும் தனியார் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு, அரசியலில் பங்கேற்றல் மற்றும் நிர்வாக ரீதியான முக்கிய இடங்களில் முடி வெடுப்பதற்கான உரிமையை 

பெறுதல் தான் பெண்களுக்கான சம உரிமை மற்றும் முன்னேற்றத் திற்க்கான முதல் படியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். 

என்னுடைய இந்த பதவியில் இருந்து பெண்களுக்கான முன்னேற்றத்திற்காக நான் எல்லா வித சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். 

பெண்களுக்கான சம உரிமையை பெற உடனடியாக நடவடிக்கை வேண்டும் என நான் நம்புகிறேன்" என்று தனது நியமனம் குறித்து தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

தந்தை ரஜினிகாந்த் வாழ்த்து

ஐஸ்வர்யா தனுஷின் நியமனம் குறித்து தந்தை ரஜினிகாந்த், "என்னுடைய மகளான ஐஸ்வர்யா எப்போதும் தன்னுடைய சொந்த காலில் நிற்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஆற்றலும் பெற்றவர். 

அவர் யு.என் உடன் இணைந்து பெண்களுக்கான சம உரிமைக்காக பணியாற்றுவது எங்களுக்கு பெருமைக் குரிய மற்றும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

பெண்களுக்கான சம உரிமைக்காக அவர் செய்துள்ள பணிகளை நான் பாராட்டுகிறேன். அவர் செய்யும் இப்பணிகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன். 

ஒரு தந்தையாக உலக நாடுகளுக்கான பெண்கள் அமைப்பின் இந்திய தூதுவராக ஐஸ்வர்யா நியமிக்கப் பட்டுள்ளது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.

அவர் பெருமைக்குரிய இப்பணியில் இருந்து பெண்களுக்கான சம உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காக பணியாற்றவிருப்பது எனக்கு மகிழ்ச்சியே.

சம உரிமை என்பது பெண்களுக்கான ஒரு பிரச்சனை மட்டும் அல்ல, சம உரிமைக்காக நாம் அனைவரும் போராட வேண்டும். 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிறுத்தப் பட வேண்டும். பெண்களுக்கு வீடுகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் சம உரிமை கிடைக்க வேண்டும்” என்று தெரிவித் திருக்கிறார் ரஜினிகாந்த்
Tags:
Privacy and cookie settings