ரக்ஷா பந்தன் பரிசாக கழிவறை !

1 minute read
ஜார்கண்ட் மாநிலத்தில் பிந்து சா என்பவர் அவரது சகோதரி ரேகா தேவிக்கு ஆகஸ்ட் 18- ஆம் தேதி கொண்டாடப்பட்ட ரக்ஷா பந்தன் பரிசாக கழிவறை கட்டி கொடுத்து தன் பாசத்தை வெளிபடுத்தி யுள்ளார்.
ரக்ஷா பந்தன் பரிசாக கழிவறை !
பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால் ஈர்க்கப்பட்ட பிந்து, 30,000 ரூபாய் செலவில் தனது சகோதரிக்காக ஒரு கழிவறை கட்ட திட்டமிட்டு நடைமுறைப் படுத்தியுள்ளார்.

இது குறித்து பிந்து கூறுகையில், பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ பற்றி கேள்வி பட்ட நான் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க என் குடும்ப உறுப்பினர் களுக்காக ஒரு கழிப்பறை கட்ட நினைத்தேன். 

இந்த செயலுக்கு ஜவஹர் நகர் பஞ்சாயத்து தலைவர் எனக்கு ஊக்கம் அளித்தார். இதன்படி, கழிவறையை கட்டி ரக்ஷா பந்தன் பரிசாக தன் தங்கைக்கு வழங்கினார். 

இந்த பரிசை பெற்றது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக ரேகா தெரிவித்துள்ளார். இச்செயல் ஜவஹர் நகர் மக்கள் மனதில் பெரும் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Today | 24, March 2025
Privacy and cookie settings