சசிகலா புஷ்பாவின் தாயார் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் !

1 minute read
வீட்டு வேலை செய்த அக்காள் - தங்கைக்கு பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் 
சசிகலா புஷ்பாவின் தாயார் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் !
முன்ஜாமீன் வழங்கக்கோரி சசிகலா புஷ்பாவின் தாயார் தாக்கல் செய்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீது வழக்கு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகிய 2 பேரும் வேலை செய்தனர். 

அந்த சமயத்தில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி ஆகிய 4 பேர் மீதும்
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், பாலியல் தொந்தரவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்ஜாமீன் மனு தாக்கல்

இந்த வழக்கில் 4-வது எதிரியாக சேர்க்கப்பட்டு உள்ள கவுரி, முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணா நகரில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்தபோது பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் தப்ப முயன்றதாகவும்,

அப்போது அவர்களை தாக்கி, மொட்டையடித்து வெற்றுத்தாள்களில் கையெழுத்து வாங்கியதாகவும் என் மீது புகார் செய்து உள்ளனர். 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
நான் சாத்தான் குளத்தை அடுத்த முதலூரில் அமைதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என் மீது கூறப்பட்டு உள்ள குற்றச் சாட்டுக்கள் பொய்யானவை.

எனவே இந்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:
Today | 22, January 2025
Privacy and cookie settings